இந்தியா

இரட்டை இலை விவகாரம்: தீபாவுக்கு தேர்தல் ஆணையம் கடிதம்

DIN

சென்னை: இரட்டை இலை சின்னம் தொடர்பான விசாரணையில் பங்கேற்க தனக்கு தேர்தல் ஆணையம் அழைப்புக் கடிதம் வழங்கியுள்ளதாக தீபா கூறியுள்ளார்.

அதிமுக இரட்டை இலைச் சின்னம் விவகாரம் தொடர்பாக அக்டோபர் 5-ஆம் தேதி இறுதி விசாரணை நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக இ.மதுசூதனன், ஓ. பன்னீர்செல்வம், வி.கே. சசிகலா, டி.டி.வி. தினகரன் ஆகியோருக்கு இந்திய தேர்தல் ஆணையத்தின் செயலாளர் பிரமோத் குமார் சர்மா கடந்த வியாழக்கிழமை(செப்.21) நோட்டீஸ் அனுப்பினார்.  
அந்த நோட்டீஸில், இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பாக ராம்குமார் ஆதித்தன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, இரட்டை இலைச் சின்னத்தை அதிமுகவின் எந்த அணிக்கு ஒதுக்குவது என்பது தொடர்பாக அக்டோபர் 31-ஆம் தேதிக்குள் முடிவெடுக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு கடந்த வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 15) உத்தரவிட்டது. 
இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக ஆவணங்களைத் தாக்கல் செய்ய செப்டம்பர் 29-ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்படுகிறது. மேலும், இரட்டை இலைச் சின்னம் விவகாரம் தொடர்பாக இறுதி விசாரணை அக்டோபர் 5-ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும். 

எனவே, நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளவர்களோ அல்லது அவர்கள் சார்பில் வழக்குரைஞர்களோ விசாரணைக்கு ஆஜராகலாம். இது தொடர்பாக கடந்த ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி நிலவரப்படி உள்ள பொதுக்குழு உறுப்பினர்கள், மத்திய நிர்வாகக் குழு உறுப்பினர்கள் அடங்கிய பட்டியலை அந்தந்த அணிகள் தாக்கல் செய்ய வேண்டும் என்று நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில், இரட்டை இலை சின்னம் தொடர்பாக அக்டோபர் 5-ஆம் தேதி நடைபெறும் இறுதி விசாரணையில் பங்கேற்க, தமக்கு தேர்தல் ஆணையம் அழைப்புக் கடிதம் வழங்கியுள்ளதாகவும், அன்று தேர்தல் ஆணையத்தில் விளக்கம் அளிக்கள்ளதாக தீபா தெரிவித்துள்ளார். 

மேலும், ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் போயஸ் கார்டன் விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளதாகவும் தீபா தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மண்ணச்சநல்லூரில் வேளாண் கல்லூரி மாணவா்களுக்கு பயிற்சி

பெருங்களூா் உருமநாதா் கோயில் தோ்த் திருவிழா

எசனை காட்டுமாரியம்மன் கோயில் தேரோட்டம்

புகழூா் நகராட்சியில் ரூ.1.58 கோடி வரி வசூல்

தமிழகம், புதுச்சேரியின் 40 தொகுதிகளுக்கு தபால் வாக்குகள் பிரிப்பு: பதிவு செய்யப்பட்டது- 8,827; பதிவு செய்யப்படாதது-21,890

SCROLL FOR NEXT