முகப்பு
இந்தியா

பாஜக எம்எல்ஏ வீட்டில் துப்பாக்கிச்சூடு நடத்தியவன் காவல்துறையிடம் இருந்து தப்பி ஓட்டம்!

ஃபிரோஸாபாத் எம்எல்ஏ வீட்டில் அடையாளம் தெரியாத மர்ம நபர் துப்பாக்கிச்சூடு நடத்தினான்.

இந்தியா

பாஜக எம்எல்ஏ வீட்டில் துப்பாக்கிச்சூடு நடத்தியவன் காவல்துறையிடம் இருந்து தப்பி ஓட்டம்!

ஃபிரோஸாபாத் எம்எல்ஏ வீட்டில் அடையாளம் தெரியாத மர்ம நபர் துப்பாக்கிச்சூடு நடத்தினான்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 5:43 PM
பகிர்:

கடந்த செப்டம்பர் 20-ந் தேதி உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஃபிரோஸாபாத் மாவட்டத்தின் எம்எல்ஏ மணீஷ் அஸிஜா வீட்டில் அடையாளம் தெரியாத மர்ம நபர் துப்பாக்கிச்சூடு நடத்தினான்.

இதையடுத்து துரித நடவடிக்கை மேற்கொண்ட காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியவனை கைது செய்தது. அவன் பெயர் அணூப் ஷர்மா என்றும் தெரிவித்தனர்.

இந்நிலையில், அணூப் ஷர்மாவை மருத்துவப் பரிசோதனைக்காக காவல்துறை மருத்துவமனைக்கு கொண்டு சென்றது.

அப்போது, பாதுகாப்புக்கு உடன் வந்த போலீஸாரை தாக்கிவிட்டு குற்றவாளி அணூப் ஷர்மா தப்பி ஓடிவிட்டான். காயமடைந்த போலீஸாருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

அதுமட்டுமல்லாமல் அணூப் ஷர்மா மீதான தேடுதல் வேட்டையை காவல்துறை தீவிரப்படுத்தியுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →