இந்தியா

பாஜக செயற்குழு தீர்மானங்கள்: ப.சிதம்பரம் விமர்சனம்

DIN

பாஜக தேசிய செயற்குழுக் கூட்டத்தில் ஜிஎஸ்டி அமலாக்கம் மற்றும் பண மதிப்பிழப்பு நடவடிக்கையைப் பாராட்டித் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதை மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
மத்திய அரசின் அந்த இருவேறு நடவடிக்கைகளால் ஏற்பட்ட பாதிப்புகள் என்னவென்று பாஜகவில் அங்கம் வகிக்கும் வர்த்தகர்களிடமே கூட அக்கட்சித் தலைமை கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
பாஜக செயற்குழுக் கூட்டம் தில்லியில் கடந்த இரு நாள்களாக நடைபெற்றது. அதில் முக்கிய அம்சமாக மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஜிஎஸ்டி அமலாக்கத்தை பாராட்டி சிறப்புத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதை ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். சுட்டுரையில் (டுவிட்டர்) இதுதொடர்பாக திங்கள்கிழமை அவர் வெளியிட்ட பதிவுகளில் தெரிவித்திருப்பதாவது;
பண மதிப்பிழப்பு நடவடிக்கையும் சரி; அவசரகதியில் அமலாக்கப்பட்ட ஜிஎஸ்டியும் சரி, பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியையும், கண்டனத்தையும் எழுப்பியுள்ளன. அந்த நடவடிக்கைகளால் ஏற்பட்ட பாதகங்களும், பாதிப்புகளும் என்னவென்று பாஜகவைச் சேர்ந்த வணிகர்களைக் கூட அக்கட்சித் தலைமை கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்று அதில் அவர் 
குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 9-இல் விஜயகாந்துக்கு பத்மபூஷண் விருது: பிரேமலதா

சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ வாராகி அம்மன்...

ஆழ்வாா்கள் தமிழரங்கம் ஆறாம் ஆண்டு விழா

மாட்டுக் கொட்டகை எரிந்து சேதம்

முஸ்லிம்கள் ஹஜ் பயணத்துக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி: ஆந்திரத்தில் பாஜக கூட்டணி வாக்குறுதி

SCROLL FOR NEXT