இந்தியா

பாரத் பந்த் வன்முறையில் 7 பேர் சாவு: 1,000-க்கும் மேற்பட்டோர் கைது

எஸ்.சி. எஸ்.டி சட்டவிவகாரம் தொட்பாக திங்கள்கிழமை நடைபெற்ற பாரத் பந்த்தின் போது ஏற்பட்ட வன்முறையில் 7 பேர் உயிரிழந்தனர்.

Raghavendran

எஸ்.சி, எஸ்.டி. வன்கொடுமைச் சட்டத்தின் பயன்பாடு தொடர்பான வழக்கு ஒன்றை அண்மையில் விசாரித்த உச்ச நீதிமன்றம், எஸ்.சி, எஸ்.டி. வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் உடனடியாக கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யவும், கைது நடவடிக்கை மேற்கொள்ளவும் தடை விதித்து மார்ச் 20-ஆம் தேதி தீர்ப்பளித்தது.

உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பானது 1989-ஆம் ஆண்டு எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்துவிடும் என்று மத்திய அரசுக்கு எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. 

இந்நிலையில் எஸ்.சி., எஸ்.டி. சட்ட விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அனந்தகுமார் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தலித் அமைப்புகள் நாடு தழுவிய 'பாரத் பந்த்துக்கு' திங்கள்கிழம அழைப்பு விடுத்திருந்தன.

இந்த போராட்டத்தில் பிகார், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் ஜார்கண்ட் உள்ளிட்ட வட மாநிலங்களில் பல இடங்களில் வன்முறை ஏற்பட்டது. 

இதில் ரயில்கள் மறிக்கப்பட்டன, வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. இதையடுத்து வன்முறையை கட்டுப்படுத்த காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மத்தியப்பிரதேசத்தில் 5 பேர், உத்தரப்பிரதேசத்தில் 2 பேர் மற்றும் ராஜஸ்தானில் ஒருவர் உயிரிழந்தனர். இந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல்வரின் தாயுமானவா் திட்டம்: திருவள்ளூா் மாவட்டத்தில் இன்று தொடக்கம்

கூட்டுறவு சங்க உதவியாளா் பணித் தோ்வு: நுழைவுச் சீட்டு வெளியீடு!

சென்னை மாநகராட்சி அரையாண்டு வரி வருவாய் ரூ.1,002 கோடி!

ரூ. 500-க்கு இருதய முழு பரிசோதனை: ஸ்ரீநாராயணி மருத்துவமனையில் புதிய திட்டம்!

திருவண்ணாமலை உழவா் சந்தையில் 27 டன் காய்கறிகள் பழங்கள் விற்பனை: வேளாண் அலுவலா் சுபஸ்ரீ தகவல்

SCROLL FOR NEXT