புது தில்லி: இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை வழக்கமானதை விட இந்த ஆண்டு கடுமையான வெப்பம் தகிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான மாதங்கள் கோடை காலமாகும். இந்தியாவின் அனைத்து மண்டல வானிலை ஆய்வு மையங்களில் இருந்தும் கிடைத்திருக்கும் தகவலின் அடிப்படையில், ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலம் அதிக வெப்பமானதாக இருக்கும் என்று தெரிய வந்துள்ளது.
விதிவிலக்காக கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு, தென் பகுதிகளில் வழக்கமான வெப்பநிலையை விட சற்று குறைவாக இருக்கவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
பல்வேறு துணை மண்டலங்களில், இதே காலக்கட்டத்திலான வெப்ப அளவானது கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சற்று குறைந்தே காணப்படுகிறது.
ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ஹரியாணா, சண்டிகர், தில்லி, இமாச்சல் உள்ளிட்ட பகுதிகளில் வரும் கோடை மாதங்களில் சராசரி வெப்ப அளவை விட 1 செ.மீ. வெப்பம் அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
உத்தரகாண்ட், மேற்கு உத்தரப்பிரதேசம், கிழக்கு மற்றும் மேற்கு ராஜஸ்தான் உள்ளிட்ட பகுதிகளில் 0.5 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பம் உயரலாம்.
இதைத் தவிர, மற்ற பகுதிகள் வழக்கமாகக் கோடையில் பதிவாகும் அதிகபட்ச வெப்பநிலையே நீடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
எனவே, இந்திய வானிலை ஆய்வு மைய வரலாற்றில் 2017ம் ஆண்டுதான் அதிக வெப்பமான கோடைக்காலம் என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த சாதனையை 2018ம் ஆண்டு முறியடிக்காது என்றே நம்பலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.