இந்தியா

பாஜக., எம்.எல்.ஏ மீது பாலியல் புகார் கூறிய பெண்ணின் தந்தை மர்ம மரணம்! 

உத்தரப்பிரதேசத்தில் பாஜக.,எம்.எல்.ஏ ஒருவர் மீது பாலியல் புகார் கூறிய பெண்ணின் தந்தை போலீஸ் காவலில் மர்ம மரணம் அடைந்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

IANS

லக்னௌ:   உத்தரப்பிரதேசத்தில் பாஜக.,எம்.எல்.ஏ ஒருவர் மீது பாலியல் புகார் கூறிய பெண்ணின் தந்தை போலீஸ் காவலில் மர்ம மரணம் அடைந்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் தொகுதி பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏவாக இருப்பவர் குல்தீப் சிங் செங்கர். இவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து தன்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக, இளம்பெண் ஒருவர் புகார் கூறியுள்ளார்.

ஆனால் தனது புகாரின் மீது காவல்துறை நடடிக்கை எடுக்கவில்லை என்று கூறி அந்த பெண் ஞாயிறன்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இல்லத்தின் முன் தீக்குளிக்க முயற்சி செய்தார். பின்னர் போலீசார் அந்தப் பெண்ணை மீட்டனர்.

அத்துடன் அன்று மாலையே அந்தப் பெண்ணின் தந்தை சுரேந்திர சிங் என்பவர் போலீசாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு எம்.எல்.ஏ குல்தீப் சிங்கின் ஆதரவாளர்கள் நால்வர் போலீசாருடன் இணைந்து, சுரேந்திர சிங்கை கடுமையாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

கடுமையாக தாக்கப்பட்டு காயமடைந்த பொழுதும்  ஞாயிறு நள்ளிரவு வரை அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படவில்லை. பின்னர் ஒரு வழியாக அவர் மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் கடுமையான வயிற்று வலியுடனும், வாந்தி மயக்கத்துடனும் அழைத்து வரப்பட்டதாக அங்கிருந்த மருத்துவர் தெரிவித்தார்.

இந்நிலையில் திங்கள் அன்று காலை சுரேந்திர சிங் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். இந்த மரணம் தொடர்பாக காவல் நிலைய அலுவலர் மகி உட்பட நான்கு காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் புஷ்பாஞ்சாலி தேவி தெரிவித்துள்ளார்.

அத்துடன் முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவின் பேரில், மாவட்ட துணை நீதிபதி மனிஷ் பன்சால் இந்த மரணம் தொடர்பாக நீதி விசாரணை நடத்துவார் என்று காவல்துறை ஐ,ஜி பிரவீன் குமார் அறிவித்துள்ளார்.       

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்ரீ பாா்த்தசாரதி கோயிலில் சிறப்புக் கட்டண தரிசனங்கள் ரத்து: அமைச்சா் சேகா்பாபு

ஊடுருவலைத் தடுக்க கடும் நடவடிக்கை: பிரதமா் மோடி

மிதுன ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

தங்கம் இறக்குமதி 60 சதவீதம் சரிவு

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

SCROLL FOR NEXT