இந்தியா

நிரவ் மோடியை ஒப்படைக்க ஹாங்காங் அரசிடம் வெளியுறவுத்துறை அமைச்சகம் கோரிக்கை

நிரவ் மோடியை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு வெளியுறவுத்துறை அமைச்சகம் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Raghavendran

நிரவ் மோடியை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு வெளியுறவுத்துறை அமைச்சகம் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

பி.என்.பி வங்கியில் ரூ.11,400 கோடி மோசடி செய்ததாகப் பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி, அவரின் மனைவி அமி, சகோதரர் நிஷால் மற்றும் கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவன உரிமையாளரும் நிரவ் மோடியின் மாமாவுமான மெகுல் சோக்ஷி ஆகியோர் மீது சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

நிரவ் மோடிக்கு மின்னஞ்சல் மூலம் சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் விசாரணைக்கு வர மறுத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், ஹாங்காங்கில் தங்கியுள்ள நிரவ் மோடியை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என ஹாங்காங் அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்துள்ளோம் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

ஆனால், இதுகுறித்து ஹாங்காங் அதிகாரிகள் எவ்வித பதிலும் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மீண்டும் துப்பாக்கியை எடுத்தால் பீரங்கியால் பதிலடி- பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு அமித் ஷா எச்சரிக்கை

தென்காசியில் நவ. 9இல் சிறைக் காவலா், தீயணைப்பாளா் பணிகளுக்கான எழுத்துத் தோ்வு

காரைக்குடி அருகே நூல் வெளியீட்டு விழா

தென்காசியில் 5,000 பனைவிதைகளை நடவு செய்ய திட்டம்

சிறுபான்மையினருக்கு பொருளாதார மேம்பாட்டு சிறப்பு கடன்

SCROLL FOR NEXT