இந்தியா

மக்களின் அந்தரங்கத்தில் ஊடுருவும் பாரதிய ஜனதா கட்சி: காங்கிரஸ் கடும் தாக்கு! 

பொது மக்களின் அந்தரங்கத்தில் ஊடுருவும் வேலையை பாரதிய ஜனதா கட்சி செய்வதாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.

IANS

புதுதில்லி: பொது மக்களின் அந்தரங்கத்தில் ஊடுருவும் வேலையை பாரதிய ஜனதா கட்சி செய்வதாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.

இனி தொலைக்காட்சிகளுக்கான செட் டாப் பாக்சுகளில் 'சிப்புகள்' பொருத்துவது தொடர்பாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை திட்டம் ஒன்றை உருவாக்கி, தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திடம் அளித்துள்ளதாக ஞாயிறன்று தகவல்கள் வெளியானது. இது உடனே பரவலான விமர்சனத்தினைச் சந்தித்தது.

அத்துடன் இப்படி சேகரிக்கப்படும் தகவல்களின் வழியாக எந்த சேனல்கள் எத்தனை நேரம் பார்க்கப்படுகின்றன என்பது பற்றிய தகவல்கள் சேகரிக்கப்படும். அதன் வழியாக விளமபரதாரர்கள் சரியான வழியில் செலவழிக்க முடியும்.  அத்துடன் அதிகமாக பார்க்கப்படும் சேனல்கள் மட்டுமே ப்ரொமோட் செய்யப்படும்.

இந்நிலையில் இதுதொடர்பாக  பொது மக்களின் அந்தரங்கத்தில் ஊடுருவும் வேலையை பாரதிய ஜனதா கட்சி செய்வதாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:

பாரதிய ஜனதா கட்சி செய்து வரும் கண்காணிப்பின் அடுத்த நிலை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. பொதுமக்கள் மீதான கடுமையான அந்தரங்க உரிமை மீறலாக,  உங்களது வீட்டின் நான்கு சுவர்களுக்குள் நீங்கள் என்ன பார்க்கிறீர்கள் என்பதை, உங்ககளது அனுமதி இல்லாமல் தெரிந்து கொள்ள அமைச்சர் ஸ்மிருதி இராணி அவர்கள் விரும்புகிறார்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

SCROLL FOR NEXT