இந்தியா

பதான்கோட்டில் பயங்கரவாதிகள் மீண்டும் ஊடுருவியதாக தகவல்: தேடுதல் வேட்டை தீவிரம்

DIN

பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாகக் கிடைத்த ரகசியத் தகவலை அடுத்து, அங்கு பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
முன்னதாக கடந்த 2016-ஆம் ஆண்டு தொடக்கத்தில் பதான்கோட்டில் உள்ள இந்திய விமானப்படை தளத்துக்குள் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவி நடத்திய தாக்குதலில் பொதுமக்களில் ஒருவர் உள்பட 7 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். தாக்குதலில் ஈடுபட்ட 6 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், பதான்கோட்டில் தாக்குதல் நடத்தும் திட்டத்துடன் பயங்கரவாதிகள் ஊடுருவியிருப்பதாக ராணுவத்தினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. 
இதையடுத்து, பதான்கோட் மற்றும் பஞ்சாப் மாநிலத்தை ஒட்டிய பாகிஸ்தான் எல்லையிலும் பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே, பதான்கோட்டில் உள்ள ஐடிஐ பகுதியில் சந்தேகத்துக்குரிய நபர்கள் நடமாட்டம் இருந்ததாகத் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக ஒருவர் போலீஸில் புகார் அளித்துள்ளார். 
அதில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, காரில் சென்றபோது, ஒரு சிலர் எனது காரை வழி மறித்து, போகும் வழியில் இறக்கிவிடுமாறு கேட்டனர். 
அவர்கள் ராணுவத்தினர் என்று கூறியதால் அவர்களை காரில் அனுமதித்தேன். ஆனால், காரில் ஏறிய பிறகு அவர்களது பேச்சு சந்தேகத்தை ஏற்படுத்தியது. 
இதையடுத்து, நான் காரை நிறுத்திவிட்டு கீழே இறங்கி காவல் நிலையத்துக்கு ஓடினேன். அவர்கள் எனது காருடன் தப்பிச் சென்றுவிட்டனர் என்று அந்த நபர் தெரிவித்துள்ளார். 
எனவே, காரில் தப்பிய நபர்கள் பயங்கரவாதிகளாக இருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி நள்ளிரவில் டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

பொற்கொன்றை!

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை!

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

SCROLL FOR NEXT