புதுதில்லி: பேஸ்புக்கில் பிரபலமான மாநில முதல்வர்கள் வரிசையில் பலரையும் பின்னுக்குத் தள்ளி உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் முதலிடம் பிடித்துள்ளார்.
உலகின் பிரபலமான சமூக ஊடகங்களில் மிகவும் முக்கியமானது பேஸ்புக். இதன் மூலம் மற்றவர்களுடன் நெருக்கமான தொடர்பில் இருக்கலாம். பல்வேறு துறை சார் பிரபலங்கள் இதில் கணக்கினைத் துவங்கி பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இந்தியாவில் உள்ள மந்திரிகள், அரசியல்வாதிகள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கான பேஸ்புக் பக்கங்களை அடிப்படையாக வைத்து மிகவும் பிரபலமானவர்களின் தரவரிசை பட்டியலை பேஸ்புக் வெளியிட்டுள்ளது.
அதில் மாநில முதல்வர்களுக்கான தரவரிசையில் மற்ற அனைத்து மாநில முதல்வர்களையும் பின்னுக்குத் தள்ளி உத்தரப்பிரதேசம் மாநில முதல்வர் யோகி ஆதித்யாநாத் முதலிடம் பிடித்துள்ளார்.
இந்த தரவரிசையானது ஜனவரி 1, 2017 முதல் டிசம்பர் 31, 2017 வரையிலான கால கட்டத்தில், அவரவர்களது பக்கங்களின் செயல்பாட்டினைப் பொறுத்து உருவாக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.