இந்தியா

தெலங்கானா: காங்கிரஸில் இணைந்த பாஜக மூத்த தலைவர்

தினமணி

தெலங்கானாவைச் சேர்ந்த பாஜக மூத்த தலைவர் நாகம் ஜனார்த்தன் ரெட்டி, தில்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முன்னிலையில் அக்கட்சியில் புதன்கிழமை இணைந்தார்.
 கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், தெலங்கானா மாநிலம், மஹபூப்நகர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்த இவர், கடந்த மாதம் கட்சியில் இருந்து விலகினார்.
 பாஜகவில் இணைவதற்கு முன், தெலுங்கு தேசம் கட்சியில் இருந்த ஜனார்த்தன் ரெட்டி, ஆந்திர அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தார். ஜனார்த்தன் ரெட்டியுடன் தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த மேலும் சிலர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நூதன முறையில் கோரிக்கை

போலி மருத்துவா் கைது

நெகிழிப் பை உற்பத்தி ஆலைக்கு ‘சீல்’ வைப்பு

SCROLL FOR NEXT