இந்தியா

காவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் கூடுதல் அவகாசம் கோரிய மனுவை மத்திய அரசு 'திடீர்' வாபஸ்

காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் திட்டத்தினை செயல்படுத்த உச்ச நீதிமன்றத்தில் கூடுதல் அவகாசம் கோரி தாக்கல் செய்த மனுவை மத்திய அரசு 'திடீர்' என வாபஸ் பெற்றுள்ளது.

DIN

புதுதில்லி: காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் திட்டத்தினை செயல்படுத்த உச்ச நீதிமன்றத்தில் கூடுதல் அவகாசம் கோரி தாக்கல் செய்த மனுவை மத்திய அரசு 'திடீர்' என வாபஸ் பெற்றுள்ளது.

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் 16–ந் தேதி வழங்கிய இறுதித் தீர்ப்பில்,  நடுவர் மன்றம் வழங்கிய இறுதி தீர்ப்பை செயல்படுத்த ‘ஸ்கீம்‘ (செயல்திட்டம்) ஒன்றை 6 வாரங்களுக்குள் ஏற்படுத்துமாறு மத்திய  அரசுக்கு உத்தரவிட்டது.

ஆனால் வழங்கப்பட்ட 6 வார காலக்கெடு முடிவடைந்த நிலையில், ‘ஸ்கீம்‘ என்பதற்கு விளக்கம் கோரியும், செயல்  திட்டத்தை அமல்படுத்த 3 மாத கால அவகாசமும் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு செய்தது. இந்த மனு மீது விசாரணை  நடத்திய நீதிமன்றம் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை செயல்படுத்துவதற்கான வரைவு திட்டத்தை மே மாதம் 3–ந் தேதிக்குள் தாக்கல்  செய்யும்படி மத்திய அரசுக்கு கடந்த 9–ந் தேதி உத்தரவிட்டது.

இந்நிலையில் காவிரி விவகாரத்தில் கால அவகாசம் போதவில்லை மேலும் 2 வாரம் கால அவகாசம் கோரி மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் வெள்ளியன்று மனு தாக்கல் செய்தது. ஆனால் மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு தமிழக அரசு கண்டனம் தெரிவித்தது. தமிழக எதிர்க்கட்சிகள் தரப்பிலும் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் திட்டத்தினை செயல்படுத்த உச்ச நீதிமன்றத்தில் கூடுதல் அவகாசம் கோரி தாக்கல் செய்த மனுவை மத்திய அரசு 'திடீர்' என வாபஸ் பெற்றுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது!

புர்ஜ் கலிஃபாவில் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து!

வன்னியா் இடஒதுக்கீடு கோரி டிச.17-இல் சிறை நிரப்பும் போராட்டம்: அன்புமணி

அணுஆயுத அச்சுறுத்தலுக்கு இந்தியா அஞ்சாது: பிரதமா் மோடி

காற்று மாசை தடுக்க 3 வாரங்களில் செயல் திட்டம்: உச்சநீதிமன்றம்

SCROLL FOR NEXT