முகப்பு
இந்தியா

ஹரியாணா: கார்கில் போர் வீரரின் சிலை சேதம்

ஹரியாணா மாநிலத்தில் கார்கில் போர் வீரரின் சிலையை மர்மநபர்கள் சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:53 PM
பகிர்:

ஹரியாணா மாநிலத்தில் கார்கில் போர் வீரரின் சிலையை மர்மநபர்கள் சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ஹிசார் மாவட்டம், மிலக்பூர் கிராமத்தில், கார்கில் போரில் வீரமரணம் அடைந்த பவித்தர் குமார் என்ற ராணுவ வீரரின் நினைவாக சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை, கடந்த 28-ஆம் தேதி இரவில் மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர். இதுதொடர்பாக அந்த வீரரின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதனடிப்படையில், உரிய சட்டப்பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது என்றார் அந்த அதிகாரி.
 

முழு கட்டுரையைப் படிக்க →