முகப்பு
இந்தியா

பிரசார மேடையில் தூங்கி வழிந்த சித்தராமையா - வைரலாகும் விடியோ

பொதுக்கூட்டத்தின் மேடையிலேயே கர்நாடக முதல்வர் சித்தராமையா தூங்கி வழியும் விடியோ வெளியாகி சமூக வலைதளங்கில் வைரலாகி வருகிறது

Updated On : 30 ஏப்ரல், 2018 at 6:59 PM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:23 PM

224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வருகிற மே 12-ஆம் தேதி நடைபெறுகிறது. பின்னர் மே 15-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று ஏப்ரல் 17-ந் தேதி தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.

இதையடுத்து அங்கு ஆளும் காங்கிரஸ் கட்சியும், பாஜக-வும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. 

இந்த தேர்தலில் போட்டியிட மொத்தம் 2,655 பேர் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கர்நாடக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 224 தொகுதிகளில் பாஜக-வும், 222 இடங்களில் காங்கிரஸும், ஜேடிஎஸ் கட்சி 201 இடங்களிலும் போட்டியிடுகின்றன. இதில் மொத்தம் 2 ஆயிரத்து 436 ஆண் வேட்பாளர்களும், 219 பெண் வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.

Advertisement

இந்நிலையில், காங்கிரஸ் தரப்பில் காலாபுரகி எனுமிடத்தில் திங்கள்கிழமை காலை நடைபெற்ற பிரசாரப் பொதுக்கூட்டத்தின் மேடையிலேயே கர்நாடக முதல்வர் சித்தராமையா தூங்கி வழியும் விடியோ வெளியாகி சமூக வலைதளங்கில் வைரலாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.