பிகாரில் முன்னாள் அமைச்சரின் மகன் தண்டவாளம் அருகே சடலமாக மீட்பு
ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரின் மகனின் உடல், சந்தேகத்துக்கு இடமான வகையில், ரயில்வே தண்டவாளம் அருகே சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது.
பாட்னா: ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரின் மகனின் உடல், சந்தேகத்துக்கு இடமான வகையில், ரயில்வே தண்டவாளம் அருகே சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது.
பிகார் மாநில எம்எல்ஏ பார்தியின் மகன் தீபக் குமார் (21). நேற்று இரவு தனது நண்பர்களுடன் வீட்டை விட்டுப் புறப்பட்ட தீபக், இன்று காலை என்எம்சிஎச் மருத்துவமனை எதிரே உள்ள ரயில்வே தண்டவாளகத்தில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
தலை மற்றும் தொடைப் பகுதியில் காயங்கள் காணப்படும் நிலையில், உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தீபக்கின் மரணம் குறித்து அவரது நண்பர்களிடம் காவல்துறையினர் விசாரித்து வருகிறார்கள்.