இந்தியா

ஒடிஷா மாநில கடற்கரையில் உயர்ந்து நின்ற கருணாநிதியின் புகழ் 

செவ்வாயன்று மரணமடைந்த திமுக தலைவர் கருணாநிதியின் பெரிய மணல் சிற்பம் ஒன்றினை, ஒடிஷா மாநில கடற்கரையில் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் வடித்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.

DIN

பூரி: செவ்வாயன்று மரணமடைந்த திமுக தலைவர் கருணாநிதியின் பெரிய மணல் சிற்பம் ஒன்றினை, ஒடிஷா மாநில கடற்கரையில் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் வடித்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.

உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த திமுக தலைவர் கருணாநிதி ஆழ்வார்ப்பேட்டை காவேரி மருத்துவமனையில் செவ்வாய் மாலை 06.10 மணியளவில் மரணமடைந்தார். புதனன்று சென்னை ராஜாஜி அரங்கில் கருணாநிதியின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. பல்வேறு அரசியல் கட்சிப் பிரமுகர்கள், நடிகர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் அவரது பூத உடலுக்கு பெருமளவில் திரண்டு வந்து   அஞ்சலி  செலுத்தினர். பின்னர் 21 குண்டுகள் முழங்க அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் மெரீனா கடற்கரையில் அண்ணா சமாதியின் உள்ளே நல்லடக்கம் செய்ப்பட்டது.

இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதியின் பெரிய மணல் சிற்பம் ஒன்றினை, புதனன்று ஒடிஷா மாநில கடற்கரையில் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் வடித்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.

ஒடிஷா மாநிலத்தைச் சேர்ந்தவர் மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக். இவர் பத்மஸ்ரீ உள்ளிட்ட பல்வேறு முக்கிய விருதுகளைப் பெற்றுள்ளார். அவ்வப்போது நாட்டில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் குறித்து, உலகப்  புகழ்பெற்ற பூரி கடற்கரையில் மணல் சிற்பங்களை உருவாக்குவது இவரின் சிறப்பம்சமாகும். இதன்வழியே இவர் உலகப் புகழ் பெற்றுள்ளார்.

அந்த வகையில் முன்னாள் தமிழக முதல்வர் மற்றும் திமுக தலைவரான கருணாநிதியின் மறைவையொட்டி பூரி கடற்கரையில் அவரின் உருவத்தை மணல் சிற்பமாக சுதர்சன் தற்பொழுது உருவாக்கியுள்ளார். அந்த சிற்பத்திதில் 1924 - 2018-ம் ஆண்டைக் குறிப்பிட்டு, ஜாம்பவான் கருணாநிதிக்கு அஞ்சலி என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது.

தமிழகம் தாண்டி வெளிமாநிலமொன்றின் கடற்கரையில் கருணாநிதிக்கான அஞ்சலி இவ்வாறு செலுத்தப்படுவது அக்கட்சியினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT