இந்தியா

தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

DIN

தமிழகத்தில் கடலோர பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் பல பகுதிகளில் நேற்று முதல் இருந்தே பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையிலும் விட்டு விட்டு மழை பெய்கிறது. இதனால் வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவுகிறது. 

இந்நிலையில் தமிழகத்தில் கடலோர பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் மட்டுமின்றி, கர்நாடகா, ஆந்திரா கடலோரப் பகுதிகளிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. 

மேலும் வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் சீற்றம் அதிகமாக இருக்கும் என்பதால் அந்தப் பகுதிகளில் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே கேரளாவிலும், அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாத்தான்குளம் பரி. ஸ்தேவான் ஆலய பிரதிஷ்டை பண்டிகை

ஆத்தூா்-கீரனூா் கோயிலில் பாலாலயம்

நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவா் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

கோவில்பட்டி கி.ரா. நினைவரங்கத்தை மேம்படுத்த வலியுறுத்தல்

ஆத்தூா் அரசுப் பள்ளியில் மேலாண்மைக் குழுக் கூட்டம்

SCROLL FOR NEXT