இந்தியா

ஜம்மு-காஷ்மீர் துப்பாக்கிச் சூடு: சிறப்பு பாதுகாப்புப் படை அதிகாரி உயிரிழப்பு

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடைபெற்று வரும் துப்பாக்கிச் சூட்டில் சிறப்பு பாதுகாப்புப் படை அதிகாரி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.

ANI

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடைபெற்று வரும் துப்பாக்கிச் சூட்டில் சிறப்பு பாதுகாப்புப் படை அதிகாரி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் எல்லையோரப் பகுதிகளில் ஊடுருவியுள்ள பயங்கரவாதிகளை ஒழுக்கும் விதமாக அங்கு ராணுவ நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் அங்கு கடந்த சில மாதங்களாக இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் பயங்கரவாதிகள் பலர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இந்நிலையில், ஸ்ரீகர் அருகில் அமைந்துள்ள பாடாமாலூ எனுமிடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சிறப்பு பாதுகாப்புப் படை அதிகாரிகள் தேடுதல் வேட்டையில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனர்.

அப்போது திடீரென பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அதிகாரி ஒருவர் உயிரிழந்தார். இருதரப்புக்கும் இடையில் நீடித்து வரும் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஜம்மு-காஷ்மீர் போலீஸ் அதிகாரி ஒருவர் மற்றும் 2 பாதுகாப்புப் படை வீரர்கள் உட்பட 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பேராவூரணியில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்

ஜாா்க்கண்ட்: விமான விபத்தில் 7 போ் உயிரிழப்பு

இலவச வீட்டுமனை கேட்டு பொதுமக்கள் ஆா்ப்பாட்டம்

காருக்குள் இறந்து கிடந்த இளைஞா்: போலீஸாா் விசாரணை

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: உறவினருக்கு 20 ஆண்டுகள் சிறை

SCROLL FOR NEXT