இந்தியா

கேரளா வெள்ளம்: இரண்டு வழித்தடங்களில் நாளை மாலை வரை ரயில் சேவை நிறுத்தம்

DIN

கேரளாவின் திருவனந்தபுரம் - கோட்டயம் - எர்ணாகுளம் மற்றும் எர்ணாகுளம் - ஷோரணூர் - பாலக்காடு ஆகிய வழிகளில் ரயில் சேவை சனிக்கிழமை மாலை 4 மணி வரை ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. 

கடந்த ஒரு வார காலமாக பெய்து வரும் கனமழை காரணமாக கேரள மாநிலம் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது. வரலாறு காணாத இந்த கனமழையால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 324 பேர் உயிரிழந்துள்ளனர். ஏற்கனவே நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தால் சாலை மற்றும் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில் வியாழக்கிழமை முதல் ரயில் சேவையும் பாதிக்கப்பட்டது. 

ரயில் தண்டவாளங்களில் நிலச்சரிவு மற்றும் வெள்ளம் சூழ்ந்ததால் திருவனந்தபுரம் - கோட்டயம் - எர்ணாகுளம் மற்றும் எர்ணாகுளம் - ஷோரணூர் - பாலக்காடு ஆகிய இரண்டு வழித்தடங்களில் ரயில் சேவைகள் வெள்ளிக்கிழமை மாலை வரை நிறுத்தப்பட்டது. இது நிறுத்தமானது தற்போது சனிக்கிழமை மாலை 4 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

அதேசமயம், திருவனந்தபுரம் - ஆலப்புழை - எர்ணாகுளம் வழித்தடத்தில் தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்கியுள்ளது.  

ரயில்வே பேரிடர் மேலாண்மை அழைப்பு எண்கள்: +91-91882-92595 மற்றும் +91 91882-93595

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொருளின் பொருள் கவிதை

ப்ளிங்க் - சிந்திக்காமலேயே சிந்திக்கும் ஆற்றல்

பைசன் காளமாடன் படத்தின் பூஜை ஸ்டில்ஸ்

வேதாத்திரி மகரிசியின் படைப்புகள்

பாண்டிய நாட்டுக்கு வந்த சோதனைகள்

SCROLL FOR NEXT