இந்தியா

7 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்

DIN

7 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் செவ்வாய்கிழமை நடவடிக்கை மேற்கொண்டார்.

பிகார், சிக்கிம், ஹரியாணா, மேகாலயா, திரிபுரா, ஜம்மு-காஷ்மீர், உத்தரகண்ட் உள்ளிட்ட 7 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் செவ்வாய்கிழமை நியமிக்கப்பட்டனர். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்  இதற்கான உத்தரவை பிறப்பித்தார்.

பிகார் ஆளுநராக இருந்த சத்யபால் மாலிக், ஜம்மு-காஷ்மீர் ஆளுநராக நியமிக்கப்பட்டார். பிகார் மாநிலத்துக்கு புதிய ஆளுநராக லால்ஜி தாண்டன் நியமிக்கப்பட்டார்.

ஹரியாணா மாநிலத்துக்கு சத்யதேவ் நாராயண் ஆர்யா, உத்தரகண்ட் மாநிலத்துக்கு பேபி ராணி மௌரியா, சிக்கிம் மாநிலத்துக்கு கங்கா பிரசாத், மேகாலயா மாநிலத்துக்கு தத்தகட்டா ராய் மற்றும் திரிபுரா மாநிலத்துக்கு கப்தன் சிங் சோலாங்கி ஆகியோர் புதிய ஆளுநர்களாக நியமிக்கப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’ரயில் பெட்டியின் ‘கோடை குளியல்’

குறைவான மதிப்பெண் பெற்றவா்கள் மனம் தளராதீா் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுரை

திமுக தண்ணீா் பந்தல் திறப்பு

ஆம் ஆத்மி- காங்கிரஸ் இடையே விரிசல்? ஆம் ஆத்மி தெற்கு தில்லி வேட்பாளா் பதில்

நாகா்கோவில் சிறப்பு ரயில் தாமதமாக இயக்கம்

SCROLL FOR NEXT