இந்தியா

கனமழை காரணமாக திபெத்தில் 90 தமிழர்கள் உட்பட 150 இந்திய யாத்ரீகர்கள் சிக்கித் தவிப்பு 

கனமழை காரணமாக திபெத்தில் சாலை துண்டிக்கப்பட்டு 90 தமிழர்கள் உட்பட 150 இந்திய யாத்ரீகர்கள் சிக்கித் தவிக்கும் செய்தி வெளியாகியுள்ளது.

DIN

கெய்ரின்: கனமழை காரணமாக திபெத்தில் சாலை துண்டிக்கப்பட்டு 90 தமிழர்கள் உட்பட 150 இந்திய யாத்ரீகர்கள் சிக்கித் தவிக்கும் செய்தி வெளியாகியுள்ளது.

தமிழகம் மற்றும் கேரளாவில் இருந்து கைலாஷ் யாத்திரைக்காக 150 பேர் கொண்ட யாத்ரீகர்கள் குழு ஒன்று புறப்பட்டுச் சென்றுள்ளது. அவர்களில் 90 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள், 60 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள்.

தற்பொழுது அவர்கள் திபெத்தின் கெய்ரின் பகுதியில் தங்கி உள்ளார்கள். அங்கு பெய்து வரும் கனமழையின் காரணமாக சாலை துண்டிக்கப்பட்டு அவர்கள் உணவு, குடிநீர் எதுவும் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறார்கள்.

எனவே அவர்களை மீட்க உரிய நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும் என்று அவர்களது உறவினர்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிராமப்புற மாணவா்களுக்கான ஆங்கில பேச்சுப் பயிற்சி

நொய்டாவில் தியாகராஜ ஆராதனை விழா

கந்திலி சந்தையில் ரூ. 2 கோடிக்கு வா்த்தகம்

போதை மாத்திரைகள் விற்பனை: பெண் உள்பட இருவா் கைது

சென்னையில் இரட்டை மாடி பேருந்துகள் இயக்க நடவடிக்கை

SCROLL FOR NEXT