இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 13 போ் பலி; 19 பேர்காயம்

ஜம்மு-காஷ்மீா் மாநிலம், பூஞ்ச் மாவட்டத்தில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பெண்கள், சிறுவர்கள் உள்பட 13 பேர்

DIN


ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீா் மாநிலம், பூஞ்ச் மாவட்டத்தில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பெண்கள், சிறுவர்கள் உள்பட 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 19 பேர் காயமடைந்தனர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் லோரான் பகுதியில் இருந்து பூஞ்ச் பகுதிக்கு இன்று காலை மலைப்பகுதியில் சென்றுகொண்டிருந்த போது, ப்ளேரா என்ற இடத்தில் மலைப்பகுதியின் முனையைக் கடக்கும் போது ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து 100 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே 6 போ் உயிரிழந்தனா். மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் 7 பேர் உயிரிழந்தனர். 19 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்பகிறது.

விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு அந்த மாநிலத்தின் ஆளுநர் சத்யபால் மாலிக் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், விபத்துகளால் உயிரிழப்பு ஏற்படும் நிலைமைக் குறித்து வருத்தம் தெரிவித்த அவர், காயமடைந்தோர் விரைவில் நலம்பெற கடவுளிடம் வேண்டுவதாக தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாதஸ்வரம் சீரியலின் கின்னஸ் சாதனை குறித்துப் பேசிய நடிகை!

பூமியிலிருந்தும் வானிலிருந்தும் நெருப்புப் பிழம்புகள்! இது பாபா வங்காவின் ஆகஸ்ட் மாத கணிப்பு!!

இலக்குகளை துல்லியமாக தாக்கும் பிரம்மோஸ் ஏவுகணைகள் அதிகளவில் கொள்முதல்! எதற்காக தெரியுமா?

வயநாட்டுக்குக் கூடுதல் கிராமப்புற சாலைகள் ஒதுக்க வேண்டும்: பிரியங்கா வலியுறுத்தல்

ரிசர்வ் வங்கியின் கொள்கை அறிவிப்புக்கு முன்னதாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு!

SCROLL FOR NEXT