இந்தியா

பாஜகவுக்கு எதிராக தில்லியில் கூடிய 21 கட்சித் தலைவர்கள்: மாயாவதி 'ஆப்செண்ட்'  

பாஜகவுக்கு எதிராக மெகா கூட்டணி அமைக்க தில்லியில் திங்களன்று கூடிய கூட்டத்தில் 21 கட்சித் தலைவர்கள் கலந்து கண்டனர். 

DIN

புது தில்லி: பாஜகவுக்கு எதிராக மெகா கூட்டணி அமைக்க தில்லியில் திங்களன்று கூடிய கூட்டத்தில் 21 கட்சித் தலைவர்கள் கலந்து கண்டனர். 

பாஜகவுக்கு எதிராக உள்ள கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் கூட்டம் திங்கள்கிழமை மதியம் தில்லியில் நடைபெற்றது. இக்கூட்டத்தை சந்திரபாபு நாயுடு ஒருங்கிணைத்தார். நாடாளுமன்ற இணைப்புக் கட்டடத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் இதில் காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி, மன்மோகன் சிங், சந்திரபாபு நாயுடு, மம்தா பானர்ஜி, மு.க. ஸ்டாலின், சரத்பவார், தேவகவுடா, பரூக் அப்துல்லா, அரவிந்த் கேஜ்ரிவால், சீத்தாராம் யெச்சூரி, டி.ராஜா உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். எனினும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

இக்கூட்டத்தின் பொருள் நிரலில் பாஜக அல்லாத ஒரு மகா கூட்டணியை அமைப்பதற்கான எதிர்கால நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில் செயலாற்ற வேண்டிய உத்திகள் குறித்தும் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து வகுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன் தேசிய அளவில் கூட்டணி அமைப்பதா? அல்லது மாநில அளவில் கூட்டணியா? என்பது குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது. அதுபோலவே பிரதமர் வேட்பாளராக யாரை முன்னிறுத்துவது, முக்கியமான பிரச்சார யுக்திகள், பாஜக அரசுக்கு எதிராக மக்கள் பிரச்சினைகளை முன்னிறுத்துவது உள்ளிட்ட அம்சங்கள் தொடர்பாக இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 
முன்னதாக, எதிர்க்கட்சிகள் கூட்டம் நவம்பர் 22-ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள் காரணமாக கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

‘சிஸ்டம் கெட்டுப்போச்சு!’ பிகாரிலும் இந்தியாவிலும் மிக மோசமான சூழல்! -லாலுவின் மகன் விமர்சனம்

சுங்கச் சாவடியில் ராணுவ வீரரை கட்டி வைத்து அடித்த இளைஞர்கள்! 6 பேர் கைது!

இந்தியாவுக்கு வரி; ஆனால் சீனாவுக்கு இல்லை! அமெரிக்கா விளக்கம்!

ஆம்பர் எண்டர்பிரைசஸ் பங்குகள் 8 சதவிகிதம் உயர்வு!

அமெரிக்கா: டிரக் - கார் மோதிய விபத்தில் 3 பேர் பலி! இந்தியர் மீது கடும் விமர்சனம்!

SCROLL FOR NEXT