இந்தியா

மாநிலத் தேர்தல்களிலிருந்து மக்களவைத் தேர்தல் வேறுபட்டது:  ஜெய்ராம் ரமேஷ்

DIN


மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களிலிருந்து, மக்களவைத் தேர்தல் வேறுபட்டது. இதனால், மாநிலத் தேர்தல் முடிவுகளை, மக்களவைத் தேர்தலுக்கான அளவுகோலாக கருதி, ஒரு முடிவுக்கு வரக் கூடாது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்ற அவர், இதுதொடர்பாக பேசியதாவது:
மாநில அளவிலான தேர்தல்கள் முற்றிலும் வேறுபட்டவை. இத்தேர்தல்களில் முன்னிறுத்தப்படும் விவகாரங்கள் வேறுபட்டவை. இதனால், மாநில தேர்தல்கள் முடிவுகளை வைத்து, தேசிய அளவில் ஒரு முடிவுக்கு வரக் கூடாது. உதாரணமாக, கடந்த 1984-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ராஜீவ் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி, கர்நாடகத்தில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் 27-இல் வெற்றி பெற்றது. ஆனால், சில மாதங்களுக்கு பின் நடைபெற்ற அம்மாநில பேரவைத் தேர்தலில், மொத்தமுள்ள 224 இடங்களில் 140-இல் ஜனதா கட்சி வெற்றி பெற்றது. இது மாறுபட்ட முடிவாக அமைந்தது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜம்மு-காஷ்மீரை சிறையாக மாற்றியது மத்திய அரசு: மெஹபூபா முஃப்தி குற்றச்சாட்டு

நாளைமுதல் ‘அக்னி’ வெயில்

ஜம்மு-காஷ்மீா்: பாரமுல்லா தொகுதியில் ஒமா் அப்துல்லா வேட்பு மனுத் தாக்கல்

மக்களவைத் தோ்தலுக்கு பின் காங்கிரஸ் காணாமல்போகும்: அமித் ஷா

ரூ. 2,000 கோடி பிணையப் பத்திரம் ஏலம்: தமிழக அரசு அறிவிப்பு

SCROLL FOR NEXT