இந்தியா

5 ஆண்டுகளில் ரூ.9,842 கோடி சுங்கக் கட்டணம் வசூல்

DIN

தமிழகம் உள்பட அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளிலும் கடந்த ஐந்து ஆண்டுகளில் ரூ.9,842 கோடி சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளதாக மக்களவையில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் மன்சுக்லால் மாண்ட்வியா தெரிவித்தார்.
இது தொடர்பாக மக்களவை அதிமுக உறுப்பினர்கள் ஆர்.கே. பாரதிமோகன், வி. சத்யபாமா, ஆர்.வனரோஜா ஆகியோர் எழுப்பியிருந்த கேள்விக்கு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் மன்சுக்லால் மாண்ட்வியா வியாழக்கிழமை எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்திருப்பதாவது:
தமிழகத்தில் அரசு - தனியார் பங்களிப்புத் திட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் சாலைகள் உள்பட பல்வேறு தேசிய நெடுஞ்சாலைகளில் கடந்த ஐந்து ஆண்டுகளில் ரூ.9,842.30 கோடி சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது.
12.01.2011-ஆம் தேதி வெளியிடப்பட்ட அரசிதழ் அறிவிக்கையின்படி சுங்கக் கட்டண கொள்கைத்திட்டத்தின்பேரில் தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சலுகை ஒப்பந்தத்தின்படி அறிவிக்கப்பட்ட கட்டணச் சலுகைக் காலம் முடியும் வரை இது விதிக்கப்படும். சலுகை ஒப்பந்தம் முடிந்த பிறகு மத்திய அரசின் செயல்படுத்தும் ஆணையகம் மூலம் 40 சதவீதம் குறைக்கப்பட்ட கட்டணத்தில் வசூலிக்கப்படும்.
சாலையைப் பயன்படுத்துவோர் மூலம் மூலதனச் செலவு வசூலிக்கப்பட்ட பிறகு, தேசிய நெடுஞ்சாலைகள், பாலங்கள், சுரங்கப்பாதைகள் போன்ற பிரிவுகளைப் பயன்படுத்துவதற்கான கட்டணம் 40 சதவீதம் குறைக்கப்படும். விதிகளின்படி இந்தக் கட்டணங்கள் ஆண்டுதோறும் மாற்றி அமைக்கப்படலாம் என அந்த பதிலில் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தெட்சணமாறக நாடாா் சங்க கல்லூரி ஆண்டு விழா

சேரன்மகாதேவி அருகே மின்கம்பம் விழுந்து ஒப்பந்த ஊழியா் பலி

தனியாா் நிறுவன ஊழியா் தூக்கிட்டுத் தற்கொலை

களக்காடு சத்தியவாகீஸ்வரா் கோயிலில் மே 13- இல் வைகாசி திருவிழா கொடியேற்றம்

பிளஸ் 2: திலகா் பள்ளி 99.2% தோ்ச்சி

SCROLL FOR NEXT