இந்தியா

மேக்கேதாட்டு விவகாரத்தால் அமளி: மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

மேக்கேதாட்டு விவகாரத்தை முன்வைத்து அதிமுக உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும்

DIN


புதுதில்லி: மேக்கேதாட்டு விவகாரத்தை முன்வைத்து அதிமுக உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது.

நாடாளுமன்ற மக்களவை இன்று காலை கூடியதும், மேக்கேதாட்டு விவகாரத்தை மையப்படுத்தி அதிமுக எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். ரஃபேல் விவகாரம் குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும், ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக எம்.பி.க்களும் கடும் அமளியில் ஈடுபட்டனனர். இதனால் மக்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைத்தார் மக்களவை சபாநாயகர் சுமத்ராமகாஜன். 

அதேபோல், மாநிலங்களவையிலும், மேக்கேதாட்டு விவகாரத்தை அதிமுக எம்.பி.க்களும், ரஃபேல் விவகாரம் குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட எம்.பி.க்களும் வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திரைத்துறையில் 20 ஆண்டுகள்... ரெஜினா கேசண்ட்ராவுக்கு குவியும் வாழ்த்துகள்!

அறிமுகமான நாளில் எம்வீ ஃபோட்டோ வாலாட்டிக் பங்குகள் 1% உயர்வு!

தமிழ்நாட்டில் அடுத்த 5 நாள்களுக்கு கனமழை | செய்திகள்: சில வரிகளில் | 18.11.25

தில்லி கார் வெடிப்பு: கைதான ஜசிர் பிலாலுக்கு 10 நாள்கள் விசாரணைக் காவல்!

ஆஷஸ் தொடர்: வேகப் பந்துவீச்சாளர்களுக்கு ஜேம்ஸ் ஆண்டர்சன் கொடுத்த அறிவுரை!

SCROLL FOR NEXT