முகப்பு
இந்தியா

2019ம் ஆண்டில் ஏடிஎம்கள் இருக்குமா? இருந்தாலும் செயல்படுமா?

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை முன்னெடுக்கும் மத்திய அரசின் நடவடிக்கையால், வங்கிகள் சமீபகாலமாக ஏடிஎம் செயல்பாடுகளில் ஆர்வம் காட்டுவது குறைந்து வருகிறது.

Updated On : 22 டிசம்பர், 2018 at 1:04 PM
பகிர்:


புது தில்லி: டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை முன்னெடுக்கும் மத்திய அரசின் நடவடிக்கையால், வங்கிகள் சமீபகாலமாக ஏடிஎம் செயல்பாடுகளில் ஆர்வம் காட்டுவது குறைந்து வருகிறது.

ஏற்கனவே செயல்பட்டுக் கொண்டிருந்த ஏடிஎம்கள் இயங்காமல் அல்லது இருந்த இடம் தெரியாமல் போயிருக்கும் நிலையில், கடந்த ஓராண்டுக்கும் மேலாக புதிதாக எங்கும் ஏடிஎம்கள் திறக்கப்படவில்லை.

இந்த நிலையில் சமீபகாலமாக ஏடிஎம்களை மூடும் எண்ணத்தில் மத்திய அரசு இருக்கிறதா என்ற கேள்விகள் அவ்வப்போது எழுப்பப்பட்டு வருகிறது. நெருப்பில்லாமல் புகையாது என்று இந்த கேள்விகள் மீது சந்தேகம் ஏற்படத்தான் செய்கிறது.

Advertisement

இந்த கேள்விக்கு யார் பதில் சொல்வது. சாட்சாத் மத்திய அரசுதான். மக்களவையில் இதுதொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. 

அதாவது, 2019ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இந்தியாவில் இருக்கும் ஏடிஎம்களில் 50% ஏடிஎம்களை மூட மத்திய அரசு திட்டமிட்டுள்ளதா என்று எழுப்பிய கேள்விக்கு, பொதுத் துறை வங்கிகளின் ஏடிஎம்களை மூடும் எண்ணம் எதுவும் இல்லை என்று பதிலளிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.