முகப்பு
இந்தியா

இந்தியாவின் மிக நீளமான இரட்டை அடுக்கு மேம்பாலத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

அஸ்ஸாம் மாநிலம் திப்ருகார் அருகே போகிபீல் என்ற இடத்தில் பிரம்மபுத்திரா நதிக்குக் குறுக்கேக் கட்டப்பட்ட இந்தியாவின் மிக நீளமான ரயில் மற்றும் வாகன மேம்பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.

Updated On : 26 டிசம்பர், 2018 at 11:10 AM
பகிர்:


போகிபீல்: அஸ்ஸாம் மாநிலம் திப்ருகார் அருகே போகிபீல் என்ற இடத்தில் பிரம்மபுத்திரா நதிக்குக் குறுக்கேக் கட்டப்பட்ட இந்தியாவின் மிக நீளமான ரயில் மற்றும் வாகன மேம்பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.

புது தில்லியில் இருந்து மதியம் திப்ருகார் வந்த மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் போகிபீல் சென்று பிரம்மபுத்திரா நதியின் தென்கரையில் அமைக்கப்பட்டுள்ள சுமார் 4.94 கி.மீ. நீளமுள்ள இரண்டு அடுக்கு மேம்பாலத்தை திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில்,மோடியுடன் அஸ்ஸாம் ஆளுநர் ஜக்தீஷ் முகி, முதல்வர் சர்பானந்தா சோனோவால் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேம்பாலத்தைத் திறந்து வைத்த பிறகு தலைவர்கள் அனைவரும் சில மீட்டர்கள் நடந்து சென்று பார்வையிட்டனர்.

Advertisement

இந்த மேம்பாலம் மூலமாக அருணாச்சலப்பிரதேசத்தின் பல மாவட்டங்களில் இருக்கும் தொடர்புகள் புத்துயிர் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.