டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார்
பஞ்சாப் கிங்ஸ்க்கு எதிரான ஆட்டத்தில் கேட்ச் பிடிக்க முயன்ற டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் அடிபட்டது.
பஞ்சாப் கிங்ஸ்க்கு எதிரான ஆட்டத்தில் கேட்ச் பிடிக்க முயன்ற டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் அடிபட்டது.
ஐபிஎல் தொடரின் 35ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரிட்சை நடத்துகின்றன. டாஸ் வென்ற தில்லி கேபிடல்ஸ் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அதிரடியாக ஆடிய அந்த அணி 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் மட்டும் இழந்து 264 ரன்கள் குவித்தது.
இந்த நிலையில் பஞ்சாப்பிற்கு எதிரான ஆட்டத்தின்போது பிரியன்ஷ் ஆர்யா அடித்த பந்தை கேட்ச் பிடிக்க முயன்ற லுங்கி இங்கிடிக்கு தலையில் அடிபட்டது. பவுண்டரி எல்லை அருகே வந்த கேட்ச்சைப் பிடிக்க பின்னோக்கி ஓடியபோது அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் தரையில் அவரது தலை பலமாக மோதியது.
Advertisement
Advertisement
இதனால் மைதானத்திலேயே வலியால் அவர் துடித்தார். சம்பவம் நடந்த உடனே டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் மருத்துவக் குழுவினர் மைதானத்திற்குள் விரைந்து வந்து முதலுதவி சிகிச்சை அளித்தனர். ஆட்டமும் சில நிமிடங்கள் நிறுத்தப்பட்டது. பின்னர் மைதானத்திற்குள் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவரை ஸ்டெச்சர் மூலமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
இதையடுத்து டெல்லி அணியில் இங்கிடிக்கு மாற்று வீரராக சமீரா களமிறங்கியுள்ளார்.
South African pacer Lungi Ngidi pacer suffered a nasty injury during Delhi Capitals' IPL 2026 match against Punjab Kings on Saturday.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.