FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து லுங்கி இங்கிடி விலகல்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து தென்னாப்பிரிக்க அணியின் வேகப் பந்துவீச்சாளர் லுங்கி இங்கிடி காயம் காரணமாக விலகியுள்ளார்.

18 செப்டம்பர் 2026, 6:55 pm IST
லுங்கி இங்கிடி - படம் | தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)
பகிர்:

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து தென்னாப்பிரிக்க அணியின் வேகப் பந்துவீச்சாளர் லுங்கி இங்கிடி காயம் காரணமாக விலகியுள்ளார்.

ஆஸ்திரேலிய அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்களில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் முதலில் நடைபெறுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி டர்பனில் வருகிற செப்டம்பர் 24 ஆம் தேதி நடைபெறுகிறது.

இந்த நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான தென்னாப்பிரிக்க அணியிலிருந்து காயம் காரணமாக வேகப் பந்துவீச்சாளர் லுங்கி இங்கிடி விலகியுள்ளார்.

Advertisement

Advertisement

காயம் காரணமாக ஏற்கனெவே ககிசோ ரபாடா மற்றும் ஓட்னில் பார்ட்மேன் விலகிய நிலையில், தற்போது அந்த வரிசையில் லுங்கி இங்கிடியும் இணைந்துள்ளார். லுங்கி இங்கிடிக்குப் பதிலாக அணியில் மாற்று வீரராக இளம் வேகப் பந்துவீச்சாளர் குபானி மொகோனா சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான தென்னாப்பிரிக்க அணி விவரம்

டெம்பா பவுமா (கேப்டன்), கார்பின் பாஷ், மேத்யூ ப்ரீட்ஸ்க், ஜெரால்டு கோட்ஸீ, குயிண்டன் டி காக், டோனி டி ஸார்ஸி, ஜோர்ன் ஃபோர்டூயின், டுயன் யான்சென், மார்கோ யான்சென், கேசவ் மகாராஜ், குவெனா மாபாகா, அய்டன் மார்க்ரம், டேவிட் மில்லர், குபானி மொகோனா, ரியான் ரிக்கல்டான், டிரிஸ்டன் ஸ்டப்ஸ்.

summary

South Africa's Right-arm quick Lungi Ngidi has been ruled out of the upcoming three-match ODI series against Australia due to a right hamstring injury.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments