முகப்பு
இந்தியா

காஷ்மீர் மாணவர்கள் மீதான தாக்குதல்: விசாரணைக்கு உத்தரவிட மெஹபூபா முஃப்தி கோரிக்கை

ஹரியாணா மாநிலத்தில் காஷ்மீர் மாணவர்கள் மீதான தாக்குதல் சம்பவத்தில் விசாரணைக்கு உத்தரவிட வேண்டி அம்மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி கோரிக்கை வைத்தார்.

Updated On : 3 பிப்ரவரி, 2018 at 3:40 PM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 5:39 PM

காஷ்மீரைச் சேர்ந்த மாணவர்கள் ஹரியாணாவில் உள்ள மத்திய பல்கலைக்கழக்கதில் பயின்று வருகின்றனர் இந்நிலையில், அங்குள்ள மஹேந்திரகர் என்ற மாவடத்தில் இருக்கும் மசூதி ஒன்றில் வெள்ளிக்கிழமை வழிபாடு முடித்து அந்த மாணவர்கள் திரும்பியுள்ளனர்.

அப்போது அடையாளம் தெரியாத நபர்களால் அவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் இந்த தாக்குதல் சம்பவத்தின் காரணம் தெரியவில்லை. மேலும் இதில் படுகாயமடைந்த மாணவர்கள் அருகிலிருந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

இதுதொடர்பாக ஜம்மு-காஷ்மீர் முதல்வர் மெஹபூபா முஃப்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:

Advertisement

காஷ்மீர் மாணவர்கள் மீதான தாக்குதல் சம்பவம் மிகுந்த மன வேதனையை அளிக்கிறது. இவ்விவகாரத்தில் ஹரியாணா அரசு துரிதமாக செயல்பட்டு விசாரணை நடத்தி அந்த குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். 

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஹரியாணா மாநில காவல்துறை டிஜிபி உடன் தொடர்ந்து பேசி வருவதாகவும், அங்குள்ள காஷ்மீரைச் சேர்ந்த மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு வலியுறுத்தியுள்ளதாகவும் ஜம்மு-காஷ்மீர் டிஜிபி சேஷ்பால் வெய்ட் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.