முகப்பு
இந்தியா

பிரதமர் மோடி பேச்சு ஒன்றும் புதிதல்ல: சோனியா சாடல்

பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சு ஒன்றும் புதிதல்ல என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா சாடியுள்ளார்.

Updated On : 7 பிப்ரவரி, 2018 at 6:54 PM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 5:41 PM

நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை உரையாற்றினார். அப்போது, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

அப்போது பேசிய நரேந்திர மோடி, இந்தியாவின் இந்த நிலைக்கு காங்கிரஸ் கட்சிதான காரணம். இத்தனை ஆண்டுகளாக ஆட்சி செய்த காங்கிரஸ் நாட்டினை பிளவுபடுத்திவிட்டது என்று கடுமையாக விமரிசித்தார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா பேசியதாவது:

Advertisement

குடியரசுத் தலைவர் உரையின் மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியது ஒன்றும் புதிதல்ல. அதே பழைய பல்லவியை மீண்டும் மீண்டும் பாடிக்கொண்டிருக்கிறார்.

ஆனால் பிரதமரிடம் மக்களின் எதிர்பார்ப்பு வேறு மாதிரியானது. அவர்கள் வேலைவாயப்பை எதிர்பார்க்கின்றனர். தங்களின் எதிர்காலம் குறித்து எதிர்பார்க்கின்றனர். நாட்டின் வளர்ச்சியை எதிர்பார்க்கின்றனர். ஆனால் இதுகுறித்து பிரதமர் மோடி எதுவும் குறிப்பிடவில்லை என்று சாடியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.