இந்தியா

ரஃபேல் விவரங்களை வெளியிடுவது தேச நலனுக்கு எதிரானது: அமித் ஷா

DIN

ரஃபேல் போர் விமானங்கள் கொள்முதல் விவரங்களை வெளியிடுவது தேசத்தின் நலனுக்கு எதிரானது என்று பாஜக தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார். இதுபோன்ற விஷயங்களை முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசும் வெளியிட்டதில்லை என்று அவர் கூறியுள்ளார்.
ரஃபேல் விவகாரத்தில் காங்கிரஸýக்கு பதிலடி தரும் வகையில் இக்கருத்துகளை அவர் வெளியிட்டுள்ளார். தில்லியில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற பாஜக எம்.பி.க்கள் கூட்டத்தில் பேசியபோது அமித் ஷா இவ்வாறு கூறியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரான்ஸ் நிறுவனத்திடம் இருந்து ரஃபேல் ரக போர் விமானங்களைக் கொள்முதல் செய்வதில் மத்திய பாஜக அரசு விதிகளுக்குப் புறம்பாகச் செயல்பட்டதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்நிலையில், மத்திய பட்ஜெட் மீதான விவாதம் மக்களவையில் அண்மையில் நடைபெற்றபோது, மத்திய முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான வீரப்ப மொய்லி பேசுகையில், ரஃபேல் விவகாரத்தில் மிகப் பெரிய ஊழல் நடைபெற்றுள்ளதாகவும், இதுதொடர்பாக மத்திய பாஜக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் கூறினார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், இந்த விவகாரத்தை முன்னிறுத்தி மத்திய அரசை விமர்சித்திருந்தார்.
இதற்கு மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியும், பாஜக மூத்த தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த வரிசையில் தற்போது அமித் ஷாவும் காங்கிரஸின் குற்றச்சாட்டுக்குப் பதிலளிக்கும் விதமாக கருத்து தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜெயக்குமார் மரண வழக்கில் புதிய தடயம்

பச்சகுப்பம்: பாலாற்றில் வெள்ளம்!

சினிமாவிலிருந்து விலகுவீர்களா? கங்கனா ரணாவத் பதில்!

ரூ. 35 கோடி பறிமுதல்: ஜார்கண்ட் அமைச்சரின் செயலர், பணியாளர் கைது

தேர்தல் பணியிலிருந்த அதிகாரி மாரடைப்பால் மரணம்!

SCROLL FOR NEXT