இந்தியா

இது புதுசு.. கட்டண கழிப்பறையில் ஏடிஎம் வசதி: திருச்சி மாநகராட்சியின் புதிய யோசனை

அடுத்த முறை திருச்சியில் பொதுக் கட்டண கழிப்பறைக்குச் செல்லும் போது அங்கே ஏடிஎம் வசதி இருப்பதைப் பார்த்து நீங்கள் ஆச்சரியப்படலாம்.

ENS


திருச்சி: அடுத்த முறை திருச்சியில் பொதுக் கட்டண கழிப்பறைக்குச் செல்லும் போது அங்கே ஏடிஎம் வசதி இருப்பதைப் பார்த்து நீங்கள் ஆச்சரியப்படலாம்.

கழிப்பறைக்குச் சென்றால் பணமும் எடுத்தும் வரலாம். இந்த புதிய திட்டத்தை திருச்சி மாநகராட்சி அறிமுகப்படுத்தியுள்ளது. திருச்சியில் உள்ள 17 பொதுக் கட்டண கழிப்பறையில் ஏடிஎம் வசதியை ஏற்படுத்தவும், விளம்பரப் பலகைகள் வைக்கவும் இட வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இது பொதுமக்களின் வசதிக்காக மட்டும் அல்ல.

அதாவது, திருச்சியில் உள்ள கட்டண கழிப்பறைகளை சிறந்த முறையில் பராமரிக்கத் தேவைப்படும் நிதியை ஈட்டும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. கழிப்பறைக்கு அருகே ஏடிஎம் வசதியை ஏற்படுத்தி அதற்கான வாடகையைப் பெற்று, கழிப்பறைகளை சுத்தமாக பராமரிக்க செலவிடலாம் என்று திட்டமிடப்பட்டுள்ளது. திருச்சி மாநகரின் முக்கியப் பகுதிகளில் இருக்கும் கழிப்பறைகளை மிகச் சுகாதாரமான முறையில் பராமரிக்க வேண்டியது அவசியம். எனவே, இந்த திட்டத்தை செயல்படுத்தியுள்ளோம் என்று திருச்சி மாநகர ஆணையர் என். ரவிச்சந்திரன் கூறியுள்ளார்.

திருச்சியில் உள்ள அண்ணா நகர் உழவர் சந்தைப் பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் ஏடிஎம்மை நேற்று திறந்து வைத்த போது அவர் இதனைத் தெரிவித்தார்.

திருச்சி மாநகராட்சியால், சுமார் 400 கழிப்பறைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதில் 17 கழிப்பறைகளில் ஏடிஎம் அமைக்க இடம் ஒதுக்கப்பட்டு, அவை எஸ்பிஐ வங்கிக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கத்தில் ஏழும், பொன்மலை மற்றும் கே. அபிஷேகபுரத்தில் தலா நான்கும், அரியமங்கலத்தில் இரண்டு கழிப்பறைகளும் இதற்காக தேர்வு செய்யப்பட்டுளள்ன.

இந்த 17 ஏடிஎம்களுக்கும் சேர்த்து எஸ்பிஐ வங்கி, திருச்சி மாநகராட்சிக்கு மாதந்தோறும் ரூ.1.28 லட்சத்தை வாடகையாக செலுத்தும். இது ஆண்டுக்கு ரூ.15.35 லட்சமாக இருக்கும். மேலும், கட்டண கழிப்பறை அருகே விளம்பரப் பலகைகள் வைப்பதன் மூலம் ஆண்டுக்கு ரூ.7.46 லட்சம் வருவாயாகக் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்குப் பெயர்தான் மாற்றி யோசிப்பதோ?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிரம்ப் இல்லத்தில் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த இளைஞா் சுட்டுக் கொலை

இன்று வெற்றி யாருக்கு? தினப்பலன்கள்!

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

திமுகவின் தொகுதிப் பங்கீட்டுக் கணக்கு!

விஜய் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம்: வேலூா் அகரம்சேரியில் பிரம்மாண்ட ஏற்பாடு!

SCROLL FOR NEXT