இந்தியா

தமிழகத்தைத் தொடர்ந்து கேரளாவிலும் உயர்கிறது பேருந்து கட்டணம்

DIN


திருவனந்தபுரம்: கேரளாவில் பேருந்து கட்டணத்தை உயர்த்திக் கொள்ள மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.

பேருந்து கட்டணத்தை உயர்த்தாவிட்டால், பிப்ரவரி 16ம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தனியார் பேருந்து நிறுவனங்கள் கூறியதை அடுத்து, பேருந்து கட்டணத்தை உயர்த்த மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.

இதையடுத்து, சாதாரண பேருந்துகளுக்கான குறைந்தபட்ச கட்டணம் ரூ.7ல் இருந்து ரூ.8 ஆக உயர்த்தப்பட உள்ளது. வேகப் பேருந்துகளுக்கான கட்டணம் ரூ.10ல் இருந்து ரூ.11 ஆகவும், சூப்பர் எக்ஸ்பிரஸ் பேருந்துகளில் ரூ.13ல் இருந்து ரூ.15 ஆகவும் உயர்ந்துள்ளது. மாணவர்களுக்கான கட்டணச் சலுகையில் மாற்றம் செய்யப்படவில்லை.

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் சாலைப் பணியாளா் சங்க மாநில செயற்குழுவில் தீா்மானம்

SCROLL FOR NEXT