இந்தியா

"பொலிவுறு நகரங்கள்' திட்டத்தில் ரூ.800 கோடி முதலீடு: பிரான்ஸ் வங்கி ஆர்வம்

DIN

பிரான்ஸ் அரசின் கொள்கைகளை அமல்படுத்தும் பிரான்ஸ் வளர்ச்சி வங்கியான ஏஎஃப்டி இந்தியாவில் செயல்படுத்தப்படவுள்ள "பொலிவுறு நகரங்கள்' திட்டத்தில் ரூ.800 கோடி முதலீடு செய்ய தயாராக உள்ளதாக அறிவித்துள்ளது என்று மத்திய நிதித் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நாடு முழுவதும் 99 நகரங்களை நவீன வசதிகளுடன் கூடிய பொலிவுறு நகரங்களாக மாற்ற மத்திய அரசு இதுவரை தேர்வு செய்துள்ளது. அதற்கு, ரூ.2.03 லட்சம் கோடி நிதி தேவைப்படுகிறது. இந்நிலையில், பிரான்ஸ் வங்கி அத்திட்டத்தில் முதலீடு செய்ய முன்வந்துள்ளது. இதுகுறித்து அந்த அதிகாரி மேலும் கூறியதாவது:
பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் அடுத்த மாதம் இந்தியா வருகை தருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது, முதலீட்டு விவகாரம் குறித்து இறுதி செய்யப்பட வாய்ப்புள்ளது. உலக வங்கியும் பொலிவுறு நகரங்கள் திட்டத்துக்கு உதவிக் கரம் நீட்டியுள்ளது. ஜெர்மனி, ஜப்பான் போன்ற சில நாடுகளும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தத் தேவையான தொழில்நுட்ப உதவிகளை அளிக்கத் தயாராக இருப்பதாக ஆர்வம் தெரிவித்துள்ளன என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.
பிரான்ஸ் வளர்ச்சி வங்கியான ஏஎஃப்டி வளர்ந்து வரும் நாடுகளில் செயல்படுத்தப்பட்டுவரும் சிறப்புத் திட்டங்களுக்கு தொழில்நுட்ப ரீதியிலும், நிதியுதவி அளித்தும் உதவி வருகிறது.
அந்த வங்கியின் கிளை இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ், குடிநீர், மின்சார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும். இந்நகரங்களில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு தலா ரூ.500 கோடி அளிக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஃப்காவின் வாசகி!

தி.நகர் மேம்பாலத்தில் டிசம்பருக்கு பின் போக்குவரத்துக்கு அனுமதி?

முக்கிய கட்டத்தில் விசாரணை: கவிதாவின் காவல் மேலும் நீட்டிப்பு!

ஜார்கண்டில் தொடரும் சோதனை: மேலும் ரூ. 1.5 கோடி பறிமுதல்

வெயிலில் இறந்தவர்களுக்கு நிதியுதவி: கேரள அரசை வலியுறுத்தும் காங்கிரஸ்!

SCROLL FOR NEXT