இந்தியா

புத்த கயை வெடிகுண்டு வழக்கு: 5-ஆவது பயங்கரவாதி கைது

தினமணி

புத்த கயை வெடிகுண்டு வழக்கில் ஜமாத்-உல்-முஜாஹிதீன் (ஜேஎம்பி) பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 5-ஆவது நபரை கொல்கத்தா போலீஸார் கைது செய்தனர்.
 இதுதொடர்பாக, போலீஸ் உயரதிகாரி ஒருவர் சனிக்கிழமை கூறியதாவது:
 பெüத்த மதத் துறவி தலாய் லாமா, பிகார் மாநிலம், புத்த கயை நகருக்கு கடந்த மாதம் 19-ஆம் தேதி வந்தபோது, 2 சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பாக, ஜேஎம்பி பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 4 பேரை கொல்கத்தா சிறப்புப் படை போலீஸார் கடந்த மாதம் கைது செய்யப்பட்டனர்.
 இந்நிலையில், 5-ஆவது நபராக, நூர் ஆலம் (20) என்பவர், மேற்கு வங்க மாநிலம், முர்ஷிதாபாதில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார். அவர், முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள காமத் கிராமத்தைச் சேர்ந்தவர். இவர், மற்ற நான்கு பேருடன் சேர்ந்து, ஹைதராபாதில் உள்ள ஜேஎம்பி பயங்கரவாத அமைப்பின் தலைவரை கடந்த நவம்பர் மாதம் சந்தித்தது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது என்றார் அவர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வருங்கால வைப்பு நிதி குறை தீா்க்கும் முகாம்

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

ஹெலிகாப்டர் விபத்திலிருந்து உயிர்தப்பிய அமித் ஷா? என்ன நடந்தது?

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

SCROLL FOR NEXT