மம்தா கட்சியிலிருந்து விலகிய முன்னாள் கால்பந்து வீரர்!
மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் பைசுங் பூட்டியா அறிவித்துள்ளார்.
கொல்கத்தா: மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் பைசுங் பூட்டியா அறிவித்துள்ளார்.
இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் பைசூங் பூட்டியா. கால்பந்து விளையாட்டில் சிறந்து விளங்கி வந்தார். விளையாட்டில் இருந்து இருந்து ஓய்வு பெற்ற பின்னர் மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
அக்கட்சி சார்பாக 2014 பாராளுமன்ற தேர்தல் மற்றும் 2016 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட அவர் இரண்டிலும் தோல்வி அடைந்தார். பின்னர் பொதுவாகவே கட்சி நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டாமல் விலகியே இருந்தார்.
இந்நிலையில் திங்களன்று திரிணமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக பூட்டியா தனது ட்விட்டர் பக்கத்தில் தகவல் தெரிவித்துள்ளார்.