லஷ்கர் இ தொய்பாவில் சேருமாறு வாட்ஸப் அழைப்பு: இளைஞர் காவல்துறையில் புகார்!
உத்தர பிரதேசத்தில் 'லஷ்கர் இ தொய்பா' என்னும் வாட்ஸப் குழுவில் சேருமாறு அழைப்பு வந்ததை அடுத்து அதிர்ச்சியடைந்த இளைஞர் ஒருவர் சைபர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
லக்னௌ: உத்தர பிரதேசத்தில் 'லஷ்கர் இ தொய்பா' என்னும் வாட்ஸப் குழுவில் சேருமாறு அழைப்பு வந்ததை அடுத்து அதிர்ச்சியடைந்த இளைஞர் ஒருவர் சைபர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் லக்னௌவில் இளைஞர் ஒருவருக்கு அவர் உறுப்பினராக உள்ள வாட்ஸப் குழுவில் அழைப்பு ஒன்று வந்துள்ளது. அது 'லஷ்கர் இ தொய்பா' என்னும் வாட்ஸப் குழுவில் சேருமாறு வந்த அழைப்பாகும். இதனால் அவர் கடும் அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அவர் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இளைஞரின் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அத்துடன் தீவிரவாத தடுப்பு பிரிவினருக்கும் இது பற்றி உடனடியாக தகவல் அளிக்கப்பட்டது. காவல்துறையின் ஆரம்ப கட்ட விசாரணையில் அந்த குழுவானது ராஜஸ்தான் மாநிலத்தின் பில்வாடா மாவட்டத்தைச் சேர்ந்த 9-ஆம் வகுப்பு மாணவன் ஒருவனால் உருவாக்கப்பட்டது என்பது தெரிய வந்துள்ளது. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.