இந்தியா

ராகுல் சுற்றுப்பயணத்தின்போது தகராறு: உ.பி.யில் காங்கிரஸ் எம்எல்சி மீது வழக்குப்பதிவு

DIN

உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி சுற்றுப்பயணத்தின்போது தகராறில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டி, காங்கிரஸ் கட்சியின் சட்டமேலவை உறுப்பினர் தீபக் சிங் உள்ளிட்டோர் மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, உத்தரப் பிரதேசத்தின் சில பகுதிகளில் திங்கள்கிழமை சுற்றுப்பயணம் செய்தார். சலோன் பகுதியில் ராகுல் காந்தி வந்தபோது, அங்கிருந்த காங்கிரஸாருக்கும், போலீஸாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதேபோல், காங்கிரஸாருக்கும் அப்பகுதி மக்களுக்கும் இடையேயும் கைகலப்பு ஏற்பட்டது. இதில் ஏராளமானோர் காயமடைந்ததாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக சலோன் காவல்நிலையத்தில் தீபக் சிங் உள்ளிட்டோருக்கு எதிராக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் ஒரு வழக்கு, சலோன் பகுதியைச் சேர்ந்த நிர்மல் என்பவர் அளித்த புகாரின்பேரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மற்றோர் வழக்கு, சலோன் காவல்நிலைய பொறுப்பாளர் அளித்த புகாரின்பேரில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்திய தண்டனையியல் சட்டத்தின் 147ஆவது பிரிவு (கலவரத்தில் ஈடுபடுதல்), 323 (வேண்டுமென்று காயத்தை ஏற்படுத்துதல்), 504 (அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் உள்நோக்கத்துடன் அவமதிப்பு செய்தல்) உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

தில்லி கலால் ஊழல் வழக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு

தில்லியில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்ததாக துணை நிலை ஆளுநா் மீது ஆம் ஆத்மி புகாா்

தில்லியில் மக்களவைத் தோ்தலில் பிரதமா் மோடி,ஜெ.பி. நட்டா, ராஜ்நாத் சிங் பாஜகவின் நட்சத்திரப் பிரசாரகா்கள்!

SCROLL FOR NEXT