ஜெயலலிதா மரணம் தொடர்பாக திவாகரன் கூறியது எனக்குத் தெரியாது: டிடிவி தினகரன்
டிசம்பர் 4, 2016 மாலை 5:15 மணிக்கு மாரடைப்பு காரணமாக ஜெயலலிதா இறந்துவிட்டார் என்று திவாகரன் கூறியிருப்பது...
ஜெயலலிதாவின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்து வரும் நிலையில், அவர் டிசம்பர் 5-ஆம் தேதி மரணிக்கவில்லை என்றும், டிசம்பர் 4-ஆம் தேதி மாலை 5.15 மணிக்கே மாரடைப்பு காரணமாக இறந்துவிட்டதாக மன்னார்குடியில் நடைபெற்ற எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் திவாகரன் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், அவர் இறந்ததை ஏன் அறிவிக்கவில்லை என்று மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டபோது, தமிழகத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைகளின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள் என்று மருத்துவமனை நிர்வாகம் கூறியதாகவும் திவாகரன் தெரிவித்தார்.
இந்நிலையில், கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டிடிவி தினகரன் பேசியதாவது:
Advertisement
ஜெயலலிதா மரணம் தொடர்பாக திவாகரன் கூறிய கருத்து பற்றி எனக்கு எதுவும் தெரியாது. இதுகுறித்து அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம்தான் பதில் சொல்ல வேண்டும் என்றார்.