இந்தியா

பொலிவுறு நகரங்கள் பட்டியலில் ஈரோடு

DIN

த்திய அரசின் பொலிவுறு நகரங்கள் பட்டியலில் ஈரோடு உள்பட 9 நகரங்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. இதன் மூலம் பொலிவுறு நகரங்களின் எண்ணிக்கை 99 ஆக அதிகரித்துள்ளது.
தில்லியில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை பேசிய மத்திய நகர்ப்புற மேம்பாடு, வீட்டு வசதித் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி கூறியதாவது:
இப்போது, 4-ஆவது சுற்றாக 9 நகரங்கள் பொலிவுறு நகரங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. அதில் உத்தரப் பிரதேசத்தின் பரேலி, மொராதாபாத், சஹாரன்பூர், தமிழ்நாட்டில் ஈரோடு, பிகாரில் உள்ள பிகார் ஷெரீஃப், தாத்ரா நாகர் ஹவேலி யூனியன் பிரதேசத்தின் சில்வாசா, டாமன் மற்றும் டையூ யூனியன் பிரதேசத்தின் டையூ நகரம், அருணாசலப் பிரதேசத்தின் இடாநகர், லட்சத்தீவுகளின் கவரத்தி ஆகியவை இடம் பிடித்துள்ளன. இதன் மூலம் பொலிவுறு நகரங்கள் பட்டியலில் உள்ள நகரங்களின் எண்ணிக்கை 99 ஆக உயர்ந்துள்ளது.
புதிதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள நகரங்களில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த ரூ.500 கோடியை மத்திய அரசு அளிக்கும். பொலிவுறு நகரங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ள நகரங்களில் இதுவரை ரூ.1,40,000 கோடி மதிப்பிலான 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மேம்பாட்டுத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்றார் அவர்.
தமிழகத்தில் இருந்து சென்னை, கோவை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, சேலம், தஞ்சாவூர், வேலூர், திருப்பூர், திண்டுக்கல், தூத்துக்குடி ஆகிய நகரங்கள் ஏற்கெனவே பொலிவுறு நகரம் திட்டத்தில் உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வள்ளலாா் சா்வதேச மையம் கட்ட எதிா்ப்பு: நாம் தமிழா் கட்சி ஆா்ப்பாட்டம் அறிவிப்பு

கீழ்பவானி கால்வாய் பாசனத்துக்கு நீா் திறக்க வேண்டும்: சீமான்

ஆய்வுக்குப் பிறகே ரேஷனில் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகம்: பிரேமலதா கோரிக்கை

பயங்கரவாதத்துக்கு எதிராக சகிப்புத்தன்மை கூடாது: எஸ்சிஓ கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்

பாதுகாப்பான பயண சேவை: அரசுப் பேருந்துகளை 48 மணி நேரத்தில் ஆய்வு செய்ய உத்தரவு

SCROLL FOR NEXT