இந்தியா

மத்தியப் பிரதேச ஆளுநராக ஆனந்தி பென் நியமனம்

DIN

மத்தியப் பிரதேச மாநிலத்தின் புதிய ஆளுநராக குஜராத் முன்னாள் முதல்வர் ஆனந்தி பென் படேல் நியமிக்கப்பட்டுள்ளார்.
மத்தியப் பிரதேச ஆளுநராக இருந்த ராம் நரேஷ் யாதவின் பதவிக் காலம் கடந்த 2016-ஆம் ஆண்டு நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து, குஜராத் ஆளுநர் ஓ.பி.கோலியிடம், மத்தியப் பிரதேச ஆளுநர் பொறுப்பு கூடுதலாக ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில், மத்தியப் பிரதேச மாநிலத்தின் புதிய ஆளுநராக குஜராத் முன்னாள் முதல்வர் ஆனந்தி பென் படேல் நியமிக்கப்பட்டுள்ளதாக, குடியரசுத் தலைவர் மாளிகை சுட்டுரையில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 76 வயதாகும் ஆனந்தி பென் படேல், கடந்த 2014-ஆம் ஆண்டில் மோடி பிரதமராக பதவியேற்றதையடுத்து, குஜராத் முதல்வராக பொறுப்பேற்றார். கடந்த 2016-இல் அவர் முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடலோர பகுதிகளில் இன்று மாலை வரை ‘கள்ளக் கடல்’ எச்சரிக்கை

திருநள்ளாறு கோயில் பகுதியில் சீரமைப்புப் பணி

ஆட்டோ ஓட்டுநா் போக்ஸோவில் கைது

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் பங்குத் திருவிழா நிறைவு

திருவாரூா்-காரைக்குடி பயணிகள் ரயில் தினமும் இயக்கம்

SCROLL FOR NEXT