இந்தியா

தேசிய பெண் குழந்தை தினம்: சச்சின் டெண்டுல்கர் வெளியிட்ட விடியோ

தேசிய பெண் குழந்தை தினத்தை முன்னிட்டு நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் விடியோ வெளியிட்டுள்ளார்.

Raghavendran

இந்தியாவில் ஆண்டுதோறும் ஜனவரி 24-ந் தேதி தேசிய பெண் குழந்தை தினமாக கொணண்டாடப்பட்டு வருகிறது. இதன்மூலம் பாலின பாகுபாட்டினை களைவது, பெண் குழந்தைகளின் உரிமைகளை நிலைநாட்டுவது, பெண் குழந்தைகளின் கல்வி மேம்பாடு, பாலியல் வன்கொடுமை குற்றங்களுக்கு எதிராண நடவடிக்கை உள்ளிட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

அவ்வகையில் தேசிய பெண் குழந்தை தினம் புதன்கிழமை கொண்டாடப்படுகிறது. இதையடுத்து இவ்விகாரங்கள் தொடர்பான சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டது.  

இந்நிலையில், கிரிக்கெட்டின் கடவுள் என்றழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் தனது சமூக வலைதளப் பக்கங்களில் இதுதொடர்பான விடியோ ஒன்றை புதன்கிழமை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது:

பெண்கள் குழந்தைகள் தான் நம் நாட்டின் நம்பிக்கை. நம் வாழ்வில் ஏற்படும் சிறந்த அதிசயமாக பெண் குழந்தைகள் உள்ளனர். பெண் குழந்தைகள் மட்டுமே ஒருவரது வாழ்க்கையில் மிகச்சிறந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துகின்றனர்.

இந்தியாவின் பெண் குழந்தைகள் தங்களின் சக்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். கனவில் பாகுபாடு இல்லாதபோது நாம் மட்டும் ஏன் பாலின பாகுபாடு பார்க்கிறோம்.

அவர்களின் எதிர்காலத்தை அவர்களாகவே முடிவு செய்ய வழிவிடுங்கள். பெண் குழந்தைகள் நம் வீட்டின் மகாலட்சுமி. அவர்களின் வரவுதான் நமக்கு அனைத்து நன்மைகளையும் அளிக்கும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வழிபாட்டுக்கு 500 விநாயகா் சிலைகள்

புதுவையில் திமுக மாடல் ஆட்சி அமையும்: தமிழக அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா நம்பிக்கை

பெங்களூா் நிறுவனத்துக்கு வோ் ஊக்கி மருந்து அளிக்க புதுவை வேளாண் விஞ்ஞானி முடிவு

ரெயின்போ நகா் புனித ஜான் மரி வியான்னி ஆலயத்தில் ஆண்டு விழா

வீட்டை இடித்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தொழிலாளி போராட்டம்

SCROLL FOR NEXT