ரயில் தண்டவாளத்தில் சாகசம் செய்த காஷ்மீர் இளைஞர்களுக்கு காவல்துறை அறிவுரை
நெஞ்சை பதற வைக்கும் வகையில், தண்டவாளத்தில் படுத்து சாகசம் செய்வதாகக் கூறி உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட இரண்டு காஷ்மீர் இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
ஸ்ரீநகர்: நெஞ்சை பதற வைக்கும் வகையில், தண்டவாளத்தில் படுத்து சாகசம் செய்வதாகக் கூறி உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட இரண்டு காஷ்மீர் இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
அனந்த்நாக் மாவட்டத்தைச் சேர்ந்த அடில் மக்பூல் என்ற இளைஞர், தண்டவாளங்களுக்கு இடையே படுத்துக் கொள்ள, அவர் மீது அதிவேகமாக வந்த ரயில் கடந்து சென்றது. பிறகு எழுந்து நின்று சிரித்தபடி போஸ் கொடுக்க, இதனை அவரது நண்பர் ஒருவர் செல்போனில் படம் பிடித்துள்ளார்.
இந்த விடியோ வைரலானதைத் தொடர்ந்து காஷ்மீர் காவல்துறையினர் இவர்களை கைது செய்தது.
Advertisement
இவர்கள் செய்த மோசமான செயல் குறித்து காவல்நிலையத்தில் அறிவுரை வழங்கிய காவல்துறையினர், மீண்டும் இதுபோன்ற செயலில் ஈடுபடக் கூடாது என்று எச்சரித்து அனுப்பினர்.
நான் செய்த தவறை உணர்ந்துவிட்டேன். இதுபோன்ற செயலில் யாரும் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். என் மீது வழக்குத் தொடராமல், அறிவுரை கூறி அனுப்பிய காவல்துறைக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அடில் மக்பூப் கூறினார்.
சமூகவலைத்தளங்களில் வேகமாகப் பரவிய இந்த விடியோவைப் பார்த்த பொதுமக்கள் பலரும், தவறான முன்னுதாரணமாக இருக்கும் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.