இந்தியா

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: தீர்ப்பினை திரும்பப் பெறக் கோரிய பேரறிவாளனின் மனுவுக்கு சிபிஐ பதிலளிக்க உத்தரவு! 

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தான் உட்பட 7 பேரை குற்றவாளி என அளிக்கப்பட்ட தீர்ப்பினை திரும்பப் பெறக் கோரிய பேரறிவாளனின் மனுவுக்கு, சிபிஐ பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

DIN

புதுதில்லி: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தான் உட்பட 7 பேரை குற்றவாளி என அளிக்கப்பட்ட தீர்ப்பினை திரும்பப் பெறக் கோரிய பேரறிவாளனின் மனுவுக்கு, சிபிஐ பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தான் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தில் சில முக்கிய தகவல்களை விசாரணை அதிகாரி பதிவு செய்யாத காரணத்தால், தான் உட்பட 7 பேரை குற்றவாளி என அளிக்கப்பட்ட தீர்ப்பினை ரத்து செய்யக் கோரி, பேரறிவாளன் உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு ஒன்றிணைத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவானது புதனன்று நீதிபதிகள் ரஞ்சன் கோகாய் மற்றும் பானுமதி அடங்கிய அமர்வின் முன்  விசாரணைக்கு வந்தது. அப்பொழுது பேரறிவாளனின் மனுவுக்கு, சிபிஐ பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து, வழக்கினை ஒத்தி வைத்தது.

முன்னதாக குற்றம் நிரூபிக்கப்படும் வரை தம்மை விடுதலை செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பேரறிவாளன் வழக்கு தொடர்ந்திருந்தார். அப்பொழுது உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில், பேரறிவாளனை விடுதலை செய்ய மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒரே மாதத்தில் 3 பேர் தீக்குளித்து தற்கொலை!

வந்தாளே அல்லிப்பூ... சிம்ரன் கௌர்!

ரிசர்வ் வங்கியின் கொள்கை நாளில் சரிவை கண்ட சென்செக்ஸ், நிஃப்டி!

பாகிஸ்தான் அதிபராகும் ராணுவத் தலைமைத் தளபதி? ராணுவம் விளக்கம்!

சிராஜிக்கு எதிராக விளையாடுவது சவாலானது: மொயின் அலி

SCROLL FOR NEXT