இந்தியா

காஷ்மீரில் குடியரசு தின விழாவை சீர்குலைக்க இளம்பெண் திட்டம்: உஷார் நிலையில் காவல்துறை

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் குடியரசு தின விழாவை சீர்குலைக்கும் வகையில், இளம் பெண் ஒருவர் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக காவல்துறைக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ENS


ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் குடியரசு தின விழாவை சீர்குலைக்கும் வகையில், இளம் பெண் ஒருவர் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக காவல்துறைக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புனேவைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், காஷ்மீர் மாநிலத்திலோ அல்லது எல்லைப் பகுதியிலோ தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தி, குடியரசு தின விழாவை சீர்குலைக்கத் திட்டமிட்டிருப்பதாக புலனாய்வுத் தகவல்கள் கிடைத்துள்ளன.

இந்த தகவல் ஜம்மு காஷ்மீர் மாநில காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, காஷ்மீர் முழுவதும் உச்ச கட்ட பாதுகாப்புப் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. காவல்துறைக்கு அனுப்பப்பட்டுள்ள தகவலில், மகாராஷ்டிர மாநிலம் புனேவைச் சேர்ந்த 18 வயது பெண் ஒருவர், ஜனவரி 26ம் தேதி காஷ்மீரில் நடைபெறும் குடியரசு தின பேரணியிலோ அல்லது எல்லைப் பகுதியிலோ தற்கொலைப் படைத் தாக்குதலை நிகழ்த்தலாம் என்று புலனாய்வுத் துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

அதே சமயம், தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தவிருக்கும் அந்தப் பெண் தற்போது காஷ்மீர் எல்லையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடியரசு தின பேரணியின் போது உச்சகட்ட பாதுகாப்பை மேற்கொள்ளவும், பேரணிக்கு வரும் பெண்களை அதிதீவிர கண்காணிப்புக்குப் பிறகு அனுமதிக்கவும், தேசத்துக்கு எதிரான சதியை முறியடிக்க அனைவரும் தீவிர கண்காணிப்பில் இருக்குமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த தகவல் குறித்து காவல்துறை அதிகாரிகளுக்கு எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளதுடன், இந்த தகவலை மிகத் தீவிரமாக எடுத்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காஷ்மீர் எல்லையில் நடத்தப்படும் தற்கொலைப் படைத் தாக்குதல் குறித்து காவல்துறைக்கு முதல் முறையாக எச்சரிக்கை செய்தி கிடைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்பு, ஜெய்ஷ் இ மொஹம்மது பயங்கரவாதிகளால், காஷ்மீர் எல்லையில் இரண்டு தற்கொலைப் படைத் தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன. இரண்டுமே ராணுவ தலைமையகங்களைக் குறி வைத்து நிகழ்த்தப்பட்டவை.

தற்போது தற்கொலைப் படைத் தாக்குதல் குறித்து எச்சரிக்கை தகவல் வந்திருப்பதை அடுத்து, மாநிலம் முழுவதும் உச்ச கட்ட பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது. பேரணி துவங்கும் ஷெரி காஷ்மீர் கிரிக்கெட் மைதானம் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளது. அந்த மைதானத்தைச் சுற்றிலும் உள்ள கட்டடங்களில், துல்லியமாக துப்பாக்கிச் சூடு நடத்தும் வீரர்கள் நிறுத்தி வைக்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதுச்சேரி காங்கிரஸ் - பாஜக நிா்வாகிகள் மீது வழக்குப் பதிவு

பாகிஸ்தான் போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடா்பு: ராணுவ வீரா், பணிநீக்கப்பட்ட காவலா் உள்பட 6 போ் கைது

சித்தோட்டில் கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி மீட்பு

பிரதமா் மோடி உரை: இஸ்ரேல் எதிா்க்கட்சியினா் புறக்கணிப்பு?

ரயிலில் பயணியிடம் மடிக்கணினி திருடியவா் கைது

SCROLL FOR NEXT