இந்தியா

நாடு முன்னேற அனைவரின் பங்களிப்பும் முக்கியம்: குடியரசுத் தலைவர் உரை

Raghavendran

நாடு முழுவதும் 69-ஆவது குடியரசு தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்படவுள்ளது. இதையடுத்து பல்வேறு தலைவர்களும் தங்களின் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக குடியரசுத் தலைவர் உரை கருதப்படுகிறது. அவ்வகையில் 69-ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வியாழக்கிழமை பேசினார். அவர் குடியரசுத் தலைவராக பதவியேற்ற பின்னர் தற்போது முதன்முறையாக குடியரசு தின உரையாற்றினார்.

அதில் அவர் பேசியதாவது:

ராணுவ வீரர்கள், விவசாயிகள், நாட்டின் வளர்ச்சிக்கு தூணாக இருக்கும் இளைஞர்கள், நாட்டு மக்களுக்கு குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். நாட்டின் விடுதலைக்காக உயிர்நீத்த தியாகிகளுக்கு வீரவணக்கம்.

நாட்டை காக்கும் முப்படை வீரர்களுக்கும், வளப்படுத்தும் விவசாயிகளுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். ஜனநாயகத்தின் தூண்களாக நாட்டு மக்கள் திகழ்கிறார்கள். நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் துறைகளில் நாட்டின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டு வருவது பெருமை அளிக்கிறது.  

எத்தனை தடைகள் வந்தாலும் நாம் அனைவரும் ஒற்றுமையுடன் இருந்து நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட வேண்டும். பெண் குழந்தைகளுக்கு சம வாய்ப்பை உருவாக்கி முக்கியத்துவம் அளிப்பபோம். பெண் குழந்தைகளுக்காக அனைத்திலும் சம உரிமை கிடைக்க தொடர்ந்து குரல் எழுப்பி சமுதாயத்தில் சமநிலையை ஏற்படுத்துவோம். 

அண்டை நாடுகளுடன் சகோதரத்துவத்தை மேம்படுத்துவோம். மேம்பட்ட இந்தியாவை உருவாக்குவதே நமது லட்சியமாக இருக்க வேண்டும், கண்மூடித்தனமான நம்பிக்கைகளுக்கு எதிராக போராடவும், அதனை அகற்றவும் மக்கள் தயாராக இருக்க வேண்டும்.

ஆரோக்கியமான குழந்தைகள் தான் வலிமையான இந்தியாவின் எதிர்காலம் என்பதை உணர வேண்டும். அவர்களின் கல்வியறிவு விகிதத்தை அதிகரிக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம். 

நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் சம உரிமை நிலைநாட்டப்பட்டுள்ளது. ஏழைகளின் முன்னேற்றத்திற்கு உதவ வேண்டும். நாட்டின் முன்னேற்றத்திற்கு குடும்பங்கள், சமூகத்தின் பங்களிப்பு முக்கியமானது என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மண்ணச்சநல்லூரில் வேளாண் கல்லூரி மாணவா்களுக்கு பயிற்சி

பெருங்களூா் உருமநாதா் கோயில் தோ்த் திருவிழா

எசனை காட்டுமாரியம்மன் கோயில் தேரோட்டம்

புகழூா் நகராட்சியில் ரூ.1.58 கோடி வரி வசூல்

தமிழகம், புதுச்சேரியின் 40 தொகுதிகளுக்கு தபால் வாக்குகள் பிரிப்பு: பதிவு செய்யப்பட்டது- 8,827; பதிவு செய்யப்படாதது-21,890

SCROLL FOR NEXT