இந்தியா

மகாராஷ்டிராவில் மினிபஸ் ஆற்றில் கவிழ்ந்து 12 பேர் பலி

DIN

மகாராஷ்டிரா: மகாராஷ்டிராவின் கோல்காபூர் நகரில் மினிபஸ் ஒன்று ஆற்றில் கவிழந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

மகாராஷ்டிராவின் மேற்கே கோல்காபூரில் மினிபஸ் ஒன்று 17 பயணிகளுடன் வெள்ளிக்கிழமை இரவு கடலோர நகரனமான ரத்னகிரிலிருந்து கோல்காபூர்  நோக்கி சென்று கொண்டிருந்த மினிபஸ் இரவு 12 மணியளவில் சிவாஜி பாலத்தின் மீது சென்று கொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் பஞ்சகங்கா ஆற்றுக்குள் கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது. 

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தேடுதல் மற்றும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆற்றில் இருந்து 7 பேர் மீட்கப்பட்டதாகவும் அவர்களில் 4 பேர் உயிரிழந்து விட்டனர் என தகவல் வெளியாகி உள்ளது. இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. 

தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மினிபஸ்ஸில் பயணம் செய்தவர்களில் பெரும்பாலனோர் புனே நகரின் பேல்வாடி பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவிந்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

துணை மின் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த இரு மின் மாற்றிகள்: 6 மணி நேர மின் தடையால் மக்கள் கடும் அவதி

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

ரேபரேலியில் ராகுல் காந்தி: தீதும் நன்றும்...

இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் தொழிலாளா் சங்க ஆண்டு விழா

SCROLL FOR NEXT