இந்தியா

வங்கி கடன் மோசடி மன்னன் நீரவ் மோடிக்கு ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிப்பு 

ரூ.13,000 கோடி வங்கி மோசடி வழக்கில் சிபிஐ அளித்துள்ள ஆவணங்களின் அடிப்படையில், தொழிலதிபர் நீரவ் மோடிக்கு

ANI


புதுதில்லி: ரூ.13,000 கோடி வங்கி மோசடி வழக்கில் சிபிஐ அளித்துள்ள ஆவணங்களின் அடிப்படையில், தொழிலதிபர் நீரவ் மோடிக்கு எதிராக சர்வதேச காவல்துறை (இன்டர்போல்) ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. 

தொழிலதிபர்கள் நீரவ் மோடி, மெஹுல் சோக்ஸி ஆகியோர், பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடிக்கும் அதிகமாக கடன் மோசடியில் ஈடுபட்டுவிட்டு, குடும்பத்துடன் வெளிநாடு தப்பிய விவகாரம் இந்த ஆண்டு தொடக்கத்தில் அம்பலமானது. நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த மோசடி தொடர்பாக சிபிஐ-யும், அமலாக்கத் துறையும் தனித்தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன. இருவருக்கும் சொந்தமான ரூ.7,000 கோடிக்கும் அதிகமான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் தொடர்பாக வங்கி அதிகாரிகள் உள்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீரவ் மோடி பிரிட்டனில் இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் நிலையில், அவருக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் (தேடப்படும் நபர்) பிறப்பிக்கும்படி, இன்டர்போலிடம் சிபிஐ கோரிக்கை விடுத்திருந்தது. மேலும், நீரவ் மோடிக்கு எதிராக மும்பை நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட ஜாமீனில் வெளிவர இயலாத பிடி ஆணைகள், வங்கி மோசடி வழக்கில் பதிவு செய்யப்பட்ட குற்றப் பத்திரிகைகள் தொடர்பான ஆவணங்களை, நிரவ் மோடியின் பாஸ்போர்ட்டும் ரத்து, போலி பாஸ்போர்ட்கள் மூலமாக நிரவ் மோடி பல நாடுகளுக்கு சென்று வந்துள்ளது போன்ற தகவலை இண்டர்போலிடம் சிபிஐ சிபிஐ அளித்தது.

இதையடுத்து விசாரணை முகமைகளின் தொடர் நடவடிக்கைகளை அடுத்து, அந்த ஆவணங்கள் திருப்திகரமாக இருப்பதாக இன்டர்போல் அதிகாரிகள் தெரிவித்தனர். 

இந்நிலையில், நிரவ் மோடிக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸை இண்டர்போல் பிறப்பித்துள்ளது. அவரது சகோதரர் நிஷால் மோடி மற்றும் அவர்களின் நிறுவன தலைமை நிர்வாகி சுபாஷ் பராப் ஆகியோருக்கும் ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மூவர் மீதும் இண்டர்போல் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளதால், மூன்று பேரின் இருப்பிடத்தை கண்டறியுமாறும் அவ்வாறு கண்டறியப்பட்டால் அவர்களை கைது செய்து நாடு கடத்த வேண்டும் என 192 உறுப்பு நாடுகளிடமும் இண்டர்போல் கோரப்பட்டுள்ளதால், மூன்று பேரும் இண்டர்போல் உறுப்பு நாடுகளின் எதாவதொரு நாட்டில் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முடிந்த ஓராண்டிற்குள் மீண்டும் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடர்!

தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு! பேசியது என்ன?

T20 உலகக் கோப்பை : அடுத்த போட்டிக்காக சென்னை வந்த இந்திய அணியினர்!

தமிழ்நாடுதான் விஜய்! விஜய்தான் தமிழ்நாடு! - Vijay

AC பேருந்து நிறுத்தம்! முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!

SCROLL FOR NEXT